Friday, May 25, 2018

IAMKவும் இளைய தலைமுறையும்

இப்போ சென்னைல ஒரு படம் செமயா ஓடிக்கிட்டு இருக்கு. இத main stream porn movie னு பேரு வச்சு கூப்டுக்கிட்டு இருக்காங்க. இளைஞர்கள் கூட்டமாம் தியேட்டர்ல. எதுவுமே டபுள் மீனிங் கெடயாது, எல்லாமே ஸ்ட்ரைட் மீனிங்தான் அப்டீனு படக்குழுவினர் பெருமயா பேட்டி குடுக்குறாங்க.

என்   க்ளாஸ்  பசங்க நெறய பேர் வாட்சப் ஸ்டேடஸ்,  Fb Status ல groupies போட்டு,Watching IAMK னு tag போட்டுட்டிருக்காங்க. கஷ்டப்பட்டது வீணாப் போகல. டிக்கெட் கெடச்சிருச்சு அப்டீன்னு ஒரு செல்ஃபீ. Where are we heading towards?

இளம் வயதினருக்கு ஒரு curiosity இருக்கும் சில விசயங்கள தெரிஞ்சுக்கிறதுக்கு. தப்பில்ல. முந்தைய தலைமுறையும் பிட்டு படம் கட்டாயம் பாத்திருப்பாங்க. ஆனா பெரியவங்களுக்குத் தெரிஞ்சிரக்கூடாதுன்னு நெனச்சாங்க. சின்னதா ஒரு பயம் இருந்துச்சு. இன்னக்கி எந்த ஒரு பயமோ குற்ற எண் உணர்ச்சியோ இல்லாம Status update - யார் வேணா பாத்துக்கோ எனக்கென்ன.Is this fair youngsters?

ஏற்கனவே பெண் என்பவள் ஆணுக்காகப் படைக்கப்பட்ட ஒரு உடல் என்பதைத் தாண்டி யோசிக்க முடியாத   ஒரு சமுதாயத்தில் இது போன்ற படங்கள் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? ஆசிரியைகள் எங்கள் பாடத்தில் வரும் கணினி சார்ந்த டெக்னிக்கல் வார்த்தைகளை வகுப்பறை யில் சொல்வதற்குக் கூசுகிறோம் (எல்லாத்துக்கும் இன்னொரு மீனிங் இருக்காம். We encounter ugly grins) இந்த மாதிரியான சூழலில் டபுள் மீனிங்கே கெடயாது எல்லாம் ஸ்ட்ரைட் மீனிங் தான்னு இவங்க சொல்றத கேட்டாலே பயமாருக்கு.

12,13 வயது பிள்ளைகள் I'm in love with your body, oh I Oh I னு பாடும்போது, இன்னும் அதிகமான ஒரு retrogressive சமூகத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது. உடலை மட்டுமே பாடுபொருளாகக் கொண்டு கலை வடிவங்கள் வெளியாகும்போது நிர்பயாக்களும் தஸ்வந்த்களும் உருவாவதைத் தவிர்க்க முடியாது.

கலை வடிவங்கள் மண்ணில் உழலும் மனதை உயர்த்த வேண்டும். நம்முள் பொதிந்திருக்கும் கீழ்த்தர உணர்ச்சிகளைத் தூண்டும் விசயங்களைத் தவிர்ப்பது ஒரு சமுதாயமாக நாம் முன்னேறுவதற்கு உறுதுணையாக இருக்கும். யோசிங்க youngsters!!! 

தென்மலை ஈகோ டூரிசம் - ஆனைகளின் அருகே

வெகேஷன் எங்கயாவது இந்த வருசம் போயே ஆகணும்னு ஒரு தீர்மானம்  (வருசம் போன போக்கு அந்த மாதிரி - மண்ட காஞ்சிருச்சு). இங்க அங்கனு கொழப்பி தென்மலைனு முடிவு பண்ணியாச்சு. அப்புறம் ட்ரிப் அட்வைசர் பாத்து ரிசார்ட்டும் புக் பண்ணியாச்சு. ஆல் செட்.

செந்தூரணி வனவிலங்கு சரணாலயத்தில் நெறய பாக்கேஜ் தருகிறார்கள் . அதிலிருந்து குறுந்தொட்டில் ஃபாரஸ்ட் கேம்ப்பிங் ஆப்ட் செய்திருந்தோம். The day has arrived and we went to Shendureney tourism office . இது கேரள வனத்துறையினரால் ஆர்கனைஸ் செய்யப்படுகிறது . சென்றவுடன் ஒரு ஃபாரம் கொடுத்து நிரப்பச் சொன்னார்கள். டிபிக்கல் கவர்ன்மென்ட் ஆஃபிஸ் சாணித்தாள் . பாதி எழுத்து என்னனே தெரியல. சாராம்சம் இது தான் - ஒங்க உசுருக்கு எதுவும் ஆனா நாங்க பொறுப்பில்ல . எங்க கிட்ட நஷ்ட ஈடு கேக்க கூடாது. நல்ல  வேள எல்லா எழுத்தும் தெரியல. இன்னும் பீதியாயிடும். Formalities முடிச்சுட்டு வெளிய வந்தோம் .( கேஷ் மட்டும் தான் அக்சப்ட் பண்றாங்க) ஜீப் ரெடியா இருந்தது . டிரைவர் ஜோஸேட்டன் ( ஜோஸ் சேட்டன் - ரொம்ப ஃப்ரண்ட்லி, 19 வருசம் காட்ல காரோட்றார்). ஒரு கைட், ஒரு ஹெல்ப்பர், ஒரு குக் இவர்களுடன்  பயணம் தொடங்கியது .

ஒரு நாலு கிலோமீட்டர் தார் ரோட்ல ஓட்டுனார். அப்புறம் காட்டுப்பாதை ஆரம்பித்தது. எலும்புகள் பார்ட் பார்ட்டா கழன்றும் போல . பத்து வருஷம் முன்னால வந்துருக்க  வேண்டிய ட்ரிப்ப வயசானக்கப்புறம் வந்துட்டோமோன்னு யோசிக்கி முடிக்கிறதுக்குள்ள கேம்ப் ஷெட் வந்துருச்சு இறங்குங்கனு சொன்னார் சேட்டன் .  கைட் ஜீப்பிலிருந்து ஒரு முப்பதடி தூரத்துல யான நிக்கிது வாங்க பாப்போம்னு கூப்டார் . உதட்டில் விரல் வைத்து அமைதி காக்கச் சொல்றார். பூனை பாதம் வைத்து ஒரு பத்தடி தூரத்தில் அடர்ந்த காட்டில்  நின்று யானை சிறு மரக்கிளையை உடைத்து உடைத்து சாப்பிடுவதைப் பார்க்க திகிலாக இருந்தது . ஜோஸேட்டன் , வாசு - என் கணவர், இரு பிள்ளைகள்- 11, 13 வயது அங்கேயே நின்று பார்த்துக்கொண்டிருக்க, நான் பயம் தாங்க முடியாமல் ஜீப்பருகே சென்றேன் . கைட் பிள்ளைகளைக் கூப்பிடுங்க. ஆனெ கேறி வந்தெங்கில் பெரியவங்க ஓடிரலாம். ஆனா சின்னவங்களால ஓட முடியாதுன்னார் . என்னாது ஆனெ கேறி வருமா - அவ்வ்வ்வ், முடியல. இவங்கள எப்புடி கூப்டறதுன்னும் தெரியல .நான் இவங்கள கூப்டு ஆன வந்துருச்சுன்னா???!!!!!. அப்றம் இப்டி அப்டின்னு ஏதோ கேணத்ததனமா சைகைலாம் பண்ணி பசங்க ஒரு வழியா என்னப் பாத்துட்டாய்ங்க.நான் வா வான்னு ரொம்ப விகரஸா கூப்ட்றத பாத்துட்டு தல தெறிக்க ஓடி வர்றாய்ங்க . அட டேய் சத்தம் கேக்காம ஓடி வாங்கடா. யானக்கி கேட்ற போவுது. அதுக்குள்ள ஆனெ வாசுவயும் ஜோஸேட்டனயும் பாத்துட்டு காட்டுக்குள்ள சர சரன்னு எறங்கி போயிருச்சு. கைட்  சொன்னார்
காட்டெருமையும், கரடியும் தான் மனுசங்கள தொரத்துமாம் . கொல்லாம வுடாது அப்டீன்னு மலையாளத்துல சொன்னார் சேட்டன். ஆனா
யான மேக்சிமம் மனுசங்கள அவாய்ட் பண்ண தான் ட்ரை பண்ணுமாம். புலியும் அதே. அப்பாடி. இப்ப டாப் ஹட்குள்ள போயிரலாம். நம்ம தங்கப்போற Top hut, jeep நின்ன எடத்துல இருந்து பசுமையான    ஒரு முப்பதடி பள்ளத்துல இருக்கு. சுத்தி ஒரு எலக்ட்ரிக் ஃபென்ஸ். ஜீப் கிட்டயிருந்து பாத்தா இப்டி ஒரு Hut இருக்குறதே தெரியல. இவ்ளோ ஸ்டீப்பா எறங்கிலாம் யான வராதுனு டிஸ்கவரி சேனல் ரேஞ்சுக்கு கத வுட்டான் என் மகன். சந்தோசமா நடந்து வந்தேன்.    பாத்தா   ஃபென்ஸ் பக்கத்துல யானச் சாணம். மகள் மகனை நல்லா சாத்துனா . எனக்கு திருப்பி பயம் கெளம்பிருச்சு.

குடில்ல போய் செட்டில் ஆயாச்சு. நம்ம குக் சேட்டன் கட்டன் சாய் குடுத்தார் . Imagine அடர்ந்த காடு, அதன் நடுவே ஏழே ஏழு பேர், காட்டின் பேரமைதி, திடீரென்று அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு கிளம்பும் ஏதோவொரு பறவையின் கூவல், பின்னர் சில்வண்டுகளின் ஒலி, தொலைவில் ரிசர்வாயர், தண்ணீர் பருக வரும் வனவிலங்குகள் - Amazing it was.

குடிலைச் சுற்றி இருக்கும் Fence ஐ ஒட்டிய மரஞ்செடிகள் மிதிபட்டு கிடக்கின்றன. ஆனெ  சவட்டி எறிஞ்சு நேத்து அப்டீன்னார் நம்ம கைட் சேட்டன் . மறு நாள் காலை இன்னும் அடர்ந்த காட்டுக்குள் ட்ரெக்கிங். இதுதான் நம்ம பேக்கேஜ். ஜீப்பிலிருந்து Hutக்கு வந்ததே எனக்கு ரொம்ப அட்வன்ச்சரஸ் . இதுல காட்டுக்குள்ள அஞ்சு கிலோமீட்டரா?? ஒரு நிமிசம் தல சுத்திருச்சு 😜.
 ட்ரெக்கிங் வந்தா ஆனெ பயம் வரமாட்டேன்னு சொன்னா வாசு பயம் - என்னடா இது மதுரக்கி வந்த சோதன . ஓகே எவ்வளவோ பண்ணிட்டோம் .இதப் பண்ண மாட்டோமா. காலைல சாப்ட்டு போவோம்னு சொன்னார் நம்ம ஹெல்ப்பர். டிஃபன் பாசிப்பயறு புட்டு வாழப்பழம் அப்பளம் சீனி . எத எதுல போட்டு சாப்டுறதுன்னு ஒரு Confusion ல எல்லாத்தயும் கலந்து அடிச்சாச்சு. Then came the moment of the day. Trekking into the dense forest. சேட்டா கரடி வராதுல . ஒரு சிரிப்பு - வரும், எது வேணா வரும் . அது வீட்டுக்குள்ள தான நம்ம போறோம் அப்டீனார் . சேட்டன்மார் அநியாயத்துக்கு உண்ம பேசுறாங்கப்பா. கெளம்பியாச்சு . நாங்க நாலு பேர் நடுல, முன்னாடி ஒரு கைட், பின்னாடி ஒருத்தர் கைல கட்டாரியோட .

கட்டாரி எதுக்குன்னு கேக்கல. அப்றம் காட்டெரும கொல்ல வந்தா தேவப்படும்னு சொன்னாலும் சொல்லுவாரு. இது தேவயா நமக்கு😳. வழியெல்லாம் யானை உரித்த மரப்பட்டைகள், அப்போது போட்ட சாணம், நம்ம சேட்டன் வேற இங்க தான் ஆனெ ரெண்டு பேர சவட்டிக் கொன்னுச்சுன்னு Explanation.


சேட்டா ஆனெ தொரத்துனா எந்தா செய்யின்னு? செர்ரிய மரத்தில் ஏறில்லா . ஆனெ ஒடைக்கும் .ஓட வேண்டியதுதான் ஏதெங்கிலும் தெசயில். Bear grylls இந்த மாதிரி Situation ல என்ன செஞ்சுருப்பார், செருப்பு வாங்கி ஒரு வருசம் ஆயிருுுுச்சே

இந்த பிரச்சனை எல்லாம் யான வந்தா பாத்துக்கலாம் . அது வரை இயற்கையின் அந்தப் பேரழகு, சிட்டுக்குருவி அளவில் பட்டாம்பூச்சி , ததும்பி நிற்கும் ஏகாந்தம் , கணந்தோறும் தோன்றும் வியப்புகள் - கண்ணிரண்டு போதவில்லை . வாழ்வின் மறக்க முடியாத 5 கிலோமீட்டர். மகன் மெதுவாக என்னிடம் கேட்டான் Are you scared? Yes I am scared , fascinated , thrilled . But enjoying and loving  every step of this trail - just like life .

Just like life என்று முணுமுணுத்துப் புன்னகைத்துக் கொண்டான் என் மகன்


( இரண்டு காட்டு யானைகள், மலபார் அணில், கருங்குரங்கு இதெல்லாம் பாத்தோம் If you're particular about it 😊)

Friday, February 9, 2018

மிட்லைஃபில் சந்திக்கும் பிரச்சினைகள் - வேலன்ட்டைன்ஸ் டேவுக்காக


     வேலன்டைன்ஸ் டே நெருங்கி விட்டது. காலேஜ் வாசலில் ஃபுல்லும் ரெட்ரோஸ் விற்பனை. காலேஜ் காண்டீனில் கேட்பரி சில்க் தான் ஜாஸ்தி விற்பனையாவதாகத் தகவல் .
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே,
அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்
 என்றான் பாரதி.
    அடலஸன்ட் வயதில் ஒரு மிகக் கொடுமையான தனிமை ஒன்று வந்து மனதில் கவிந்திருக்கும். அன்பான பெற்றோர், சகோதரன், சகோதரி, ஆகச்சிறந்த நண்பர்கள் எல்லோரும் இருந்தும் யாருமே இல்லாதது போன்ற ஒரு துக்கம் மனதை அரிக்கும். சில நிமிடங்கள் தனித்திருந்தாலும், இத்துக்கம் மனதை ஆக்கிரமித்துக்கொள்ளும். அதே நேரம் ஃபிஸிக்கலி தனித்திருக்கவேண்டும் என்றும் தோன்றும்.
'Solitude has soft, silky hands, but with strong fingers it grasps the heart and makes it ache with sorrow.' – கலீல் கிப்ரான்
மனமெனும் மண்டபம் மவுனமாய் உள்ளது, யாரது யாரது மாயாஜாலமாய் உள்ளது, என்னவள் என்பவள் யார் என்று தேடித் தவிப்பது இந்நிலை.
தண்டவாளத்தில் தலைசாய்த்திருக்கும் ஒற்றைப்பூ நான் – நீ
நடந்து வருகிறாயா அல்லது
ரயிலில் வருகிறாயா (கவிஞர் – யாரோ)
என்று மனம் தடதடக்கக் காத்திருந்து, அவனோ, அவளோ நடந்து வந்துவிட்டால் (ரயிலில் வந்துவிட்டவர்களைப் பற்றி அடுத்துப் பேசுவோம்), மனம் முழுக்க சாரல் மழைதான் – வாவ் வாவ், இந்த ஸ்டேஜில் நாம் நாமே இல்லை – நானே நானா யாரோ தானா – உலகம் வண்ணமயமாய்ப் பூத்துக்குலுங்கத் துவங்கும். மணிக்கணக்கில் நீளும் தொலைபேசி அழைப்புகளும், பிரிந்திருக்கும் நேரமெல்லாம் காணத் துடிப்பதும், ஒன்றாக இருக்கும் மணித்துளிகள் சர்க்கரையாய் கரைவதும், அடேங்கப்பா. வளாகத்தின் ஸ்டோன் பென்ச்சுகளில் அமர்ந்திருக்கும் காதலர்களின் உலகிற்கும் நம்முடைய உலகிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.
அப்புறம் ஒற்றைக்கால், இரட்டைக்கால் எல்லாவற்றிலும் நின்று அவனை/ளைத் திருமணமும் செய்துகொண்டுவிடுகிறீர்கள். இனிமேல்தான் இருக்கிறது உங்கள் ஆசிட் டெஸ்ட். நமக்கு சுத்தமாகத் தெரியாத, நாம் இதுவரைப் பார்த்தறியாத முகமும் அவர்களுக்கு இருக்கிறது என்பதை உணரத்துவங்குவோம். அப்பா, அம்மா சொன்னத கேட்டுருக்கலாமோன்னு நெனச்சுட்டீங்கன்னா, you are a failure. You could have watched the movie “What happens in Vegas”. This is what the judge says to the couple
Listen, I've been married for twenty five years to the same wonderful, infuriating woman. And granted there are days when I want to light her on fire but I don't, because I love her. And that would be illegal. And you know something, and I might be old fashioned but when I said those vows, I meant them.
சில நேரம் கோபத்தில் எரித்து விடலாம் என்று தோன்றுகிறதாம். நீங்களும் என்னடா பொழப்பு இது. பெரிய தப்பு பண்ணிட்டோமோன்னு நெனக்கலாம். சில நேரம் தோண தான் செய்யும். தப்பில்ல. But, always remember, this is the person you loved with all your heart. குறைகளும் கொண்டவர்தான் உங்களது வாழ்க்கைத்துணை. நீங்களும் அப்படியே. Don’t ever allow a third person between you two – your parents, siblings, friends. காதலித்தவர்களை மணக்காமல் சந்தர்ப்பவசத்தால் வேறு யாரையாவது மணந்தவர்களின் மணவாழ்க்கையிலும், சிறு ஏமாற்றங்கள் வந்தால் கூட போதும் – பழைய உறவுகளைப் புதுப்பிக்க முயல்கிறார்கள்.
Listen, Dinosaurs had their shot, and nature selected them for extinction. – Jurassic park dialogue. Similarly, your previous relationships were also meant to be extinct. You are destined to be with your present partner (Unless and otherwise, the partner is too abusive are anything like that).
சுய-கழிவிரக்கத்தில் தன் பழைய காதலன்/காதலியையோ தேடிப் போவது இப்போது மிகச்சாதாரணமாகவும் சுலபமானதாகவும் மாறிவிட்டது நம்முடைய சோஷல் மீடியாக்களின் புண்ணியத்தில். Men and women in their 40s come to a mid-life crisis and all the hells break loose. A known devil is better than an unknown satan. Remember this.
உங்கள் வாழ்க்கைத்துணையிடம் எதுவெல்லாம் இல்லையென்று நீங்கள் நினைத்து வேறு யாரையாவது நாடுகிறீர்களோ, அவர்களிடம் நீங்கள் எதிர்பார்க்காத வேறு சாத்தான் ஒளிந்திருக்கலாம்.
For all the married couple out there, get old together. தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காது இருக்கட்டும். உங்களின் காதல் தீரா நதியாக உங்களின் ஆன்மக் கரைகளுக்குள் அலை பாயட்டும். என் மனம் நிறைந்த காதலர் தின நல்வாழ்த்துக்கள்.

Thursday, August 10, 2017

டார்க் டூரிஸம்

முன்னாடிலாம் வீட்லருந்து டூர் போனா திருச்செந்தூர் or மதுர அழகர்கோவில் or மலைக்கோட்டை, அதோட சேத்து முக்கொம்பு or குற்றாலம், கொஞ்சம் பெரிய டூர்னா ஊட்டி, கொடைக்கானல். அவ்ளோதான்.

இப்ப டூர்ஸ் லெவலே வேற - ரிலிஜஸ் டூர் பேக்கேஜஸ், ஈகோ டூரிஸம் - அங்கயே டென்ட் அடிச்சு தங்குறது (ஒரு ஊர்ல வெட்டவெளில - சுத்தி மரம், ஆறு இருக்கு- ரெண்டு கட்டில் போட்டு வச்சு இருக்காய்ங்க- அங்க தங்குறதுக்கு 220 யூரோ per nightஆம். நம்ம மொட்டமாடி கூட நல்லாத்தான் இருக்கு), அட்வன்ச்சர் டூரிஸம், ஃபுட் டூர், டார்க் டூரிஸம்.

இதில் டார்க் டூரிஸம் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த (பெரும்பாலும் நெகட்டிவ் ரீசன்ஸ் - war, poverty, genocides- இவை போல) இடங்களுக்குச் செல்வது. நம் இந்தியாவைப்பொருத்த வரையில் ஜாலியன் வாலாபாக், அந்தமான் செல்லூலார் ஜெயில், போபால் விஷ வாயுவினால் மக்கள் உயிரிழந்த இடம் ஆகியவை டார்க் டூரிஸ் ட்ஸ்பாட்கள் ஆகும். இப்போது இந்தியர்கள் இலங்கைக்கு இவ்வகை டூரிஸத்தில் அதிகம் செல்கிறார்கள். LTTEயினரின் bunker,  spots where millions of civilians were killed. என்னால் இலங்கைக்கு ஒரு போதும் செல்லமுடியாது. அவ்வளவு மனோபலம் என்னிடம் நிச்சயமாக இல்லை. I wonder how Tamils can visit these places without any emotions whatsoever.

இங்கே ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் பற்றிய ஒரு செய்தியைக் குறிப்பிட்டாக வேண்டும். டார்க் டூரிஸம் ஸ்பாட்டுகளில் உலகளவில் முக்கியமானது  concentration camps. இந்தக் கேம்புகளில் பல மில்லியன் யூதர்கள் மிகக்கொடுமையான முறையில் கொல்லப்பட்டார்கள். Poland, Auschwitz, holocaust museum ஆகியவையும் இவற்றில் அடங்கும். 

ஸ்பீல்பெர்க் ஒரு யூதர். அவர்  Schindler's Ark என்ற நாவலின் அடிப்படையில் Schindler's list என்ற ஒரு அருமையான படத்தை இயக்கினார். இத்திரைப்படம் 7 ஆஸ்கர் அவார்டுகளை வென்றது (12 nominations).அந்த நாவல் கான்சன்ட்ரேஷன் கேம்ப்பிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிரோடு திரும்பிய ஒருவரின் அனுபவங்கள். கற்பனையல்ல. ஸ்பீல்பெர்க் இந்தப்படத்தை இயக்கிய அனுபவத்தைப் பற்றி பேசும்போது - it was emotionally draining. I was frightened - என்கிறார். 20ம் நூற்றாண்டில் இப்படியெல்லாம் நடக்குமா என்று வியந்திருக்கிறார். 

அதை விட மோசமாக 21ம் நூற்றாண்டில் நடந்தேறியிருக்கிறது. நாமும் சுற்றுலா செல்கிறோம்.

Wednesday, August 9, 2017

என் மனைவிக்கு அருகே என்னைப் புதைக்காதீர்கள் - டென்மார்க் இளவரசர்

டென்மார்க் இளவரசர் ஹென்ரிக், என் மறைவிற்குப் பின் என் மனைவிக்கு அருகே என்னைப் புதைக்க வேண்டாம் என்று கூறியிருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 1967ம் ஆண்டு இளவரசி மார்கரெட்டும், ஹென்ரிக்கும் மணம் புரிந்து கொண்டனர். 1972ம் ஆண்டு இளவரசி மார்கரெட் அரியணை ஏறினார், அரசியானார். ஹென்ரிக்கும் தான் மன்னர் என்று அறியப்படவேண்டும் என்று தன் விருப்பத்தைத் தெரிவித்தார். ஆனால் அவர்கள் நாட்டின் முறைப்படி Prince Consort என்ற பட்டத்தைத்தான் தர முடியும், King Consort அல்ல என்று தெரிவித்துவிட்டார் அரசி (இங்கிலாந்திலும் இன்று வரை ராணி எலிசபெத், இளவரசர் ஃபிலிப் தான் - மன்னர் அல்ல). அதனால் இருவருக்கும் இவ்விஷயத்தில் அன்றிலிருந்தே புகைச்சல்தான் என்கின்றனர். அதன் உச்சமாக இளவரசர் முதலில் சொன்னவாறு தெரிவித்துள்ளார்.

மனைவி தன்னை விட உயர்ந்த பதவியிலோ, ஃபேமஸாகவோ இருப்பது எப்போதும் ஆண்களுக்குத் தாங்கிக்கொள்ள கடினமாகவே இருக்கிறது. இளவரசி டயானா 1995 BBC பேட்டியில் சொல்கிறார் - "We'd be going round Australia, for instance, and all you could hear was, oh, she's on the other side. Now, if you're a man, like my husband a proud man, you mind about that if you hear it every day for four weeks. And you feel low about it, instead of feeling happy and sharing it." சார்லஸ், டயானா திருமண failureக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

நம்ம சூரியகாந்தி திரைப்படத்தில், ‘பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது’ பாட்டில் - நான் நிழலைப் போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே - என்று ஹீரோ பாடுகிறார் ஹீரோயினைப் பார்த்து, that is, wife got a promotion, salary hike and the husband is feeling bad about it.

ஒரு சராசரி ஆண்மகனின் மனநிலை, தன் மனைவி எல்லா விதத்திலும் ஒரு படி குறைந்தவளாக இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால் நாம் ஒரு யுக சந்தியில் இருக்கிறோம். போன தலைமுறை - அப்பா சம்பாதித்துக் காசு கொண்டு வந்து தருவார், அம்மா சமைப்பாங்க - அவ்வளவுதான். இப்போது trend வேறு. முழுவதும் அந்தப்பக்கமும் இல்லை, இந்தப்பக்கமும் இல்லை. அதனால் தான் இன்னும் மாமியார்கள் மகன்களிடம் என்னடா காய் வெட்டிக்கிட்டு இருக்குற என்று எரிச்சல்படுபவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் நம் அடுத்த தலைமுறை திரிசங்கு சொர்க்கமாக இல்லாமல் முழுமையான ஒரு மாற்றத்தை அடைந்து விடுவார்கள். ஆண், பெண் சமத்துவம் என்று பேசப்பட்டு வருகிற ஒரு விஷயம் முழுமைப்பட்டுவிடும் என்றே நம்புகிறோம்.

Monday, August 7, 2017

லீவுக்கு எங்க போகலாம்

இந்த மாதம் லாங் வீக் எண்ட் 2,3 வருகிறது. Trip advisor, trivago எல்லா siteகளிலும் ஆஃபர் மழை பொழிந்துகொண்டிருக்கிறது. பத்தாததற்கு SOTC, Mahindra holidays என்று package offer பண்ணும் நிறுவனங்கள் ஜஸ்ட் 2 லட்ச ரூபாயில் ஐரோப்பாவின் லண்டன் பாரீஸ் என்ற விளம்பரங்கள். நம் பிள்ளைகள் பக்கத்து வீட்டு அனந்த் சம்மர் லீவுக்கு சைப்ரஸ் போறாங்க (எங்கய்யா இருக்கு இந்த சைப்ரஸ்). பிஸினஸ் க்ளாஸ்ல போறாங்களா-அதனால அவங்கள பிக்கப் பண்ண ஆடி கார் வந்துச்சு. நம்மளும் ஒரு தடவயாவது பிஸினஸ் க்ளாஸ்ல போகணும். (டேய் உன் வயசுல நான் ஏரோப்ளேன் பாத்தது கூட இல்லடா. கருடா கருடா பூப்போடுன்னு பருந்து பின்னாடி அண்ணாந்து பாத்துக்கிட்டே ஓடியிருக்கோம். அவ்வளவுதான்). துபாய், தாய்லாந்து, மொரிஷியஸ் அடேங்கப்பா. அட்வன்ச்சர் டூரிஸம், டார்க் டூரிஸம் etc etc.

டூர் போயே ஆக வேண்டும். இந்த சோஷல் மீடியாக்கள் வருகைக்குப்பின் டூர் போவது ஒரு கட்டாயம். Travelling to NJ from Mumbai airport என்று fb ஸ்டேட்டஸ் போடுவதில் ஆரம்பித்து, checked in at ……., sipping coffee in the snow, enjoying local delicacies என்று status போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அந்த local delicacy உங்கள் டேஸ்ட்டுக்கு செட்டே ஆகாவிட்டாலும் பரவாயில்லை, வயிறு பிரச்சனை பண்ணினாலும் பரவாயில்லை. அதுவா முக்கியம். ஃபோட்டோ அழகாக இருக்க வேண்டும். லைக்குகள் குவிய வேண்டும். அட்வென்ச்சர் டூர் என்று பலூனில் பறந்து, பங்கி ஜம்ப் பண்ணி ஸ்ஸ்ஸ்ஸஸஸஸப்ப்ப்பாஆஆஆஆ கண்ணக்கட்டிருச்சு.

அடுத்த வீட்டு ஆன்ட்டி சி4ல லீவுக்கு சிங்கப்பூருக்கு இன்னிக்கு போறாங்க. நீங்க எங்கயாவது போறீங்களா அப்டின்னு கேட்டாங்க. ஆமா போறோம். எங்க அப்படினாங்க. எங்க ஊருக்கு. ஒங்க ஊரா ன்னு கேக்கும் போது அவங்க expression அ பாக்கணுமே. ஊருக்குப்போறது இவ்ளோ கேவலமா எப்ப மாறுச்சுன்னு I was wondering. ஒரு காலத்துல லீவ் விட்டா சொந்த ஊருக்குப் போவோம். அங்க செய்றதுக்கும் பெருசா ஒண்ணும் இருக்காது. சும்மா we will be unwinding. That’s it. No pressure to jump from somewhere, eat some atrocious dishes. இல்லன்னா ஒரு vanல எல்லாரையும் அடச்சு கோயிலுக்குக் கூட்டிட்டுப்போவாங்க. முடிஞ்சது லீவு.


இப்பலாம் லீவே pressure தான். Pressure to prove something. பாவம் இவர்கள்.

Friday, August 4, 2017

கால சர்ப்பதோஷத்திலிருந்து எந்த வயதில் விடுபடலாம்?

கால சர்ப்ப தோஷம் உடையவர்கள் தங்கள் வாழ்வின் முதல் பாதியில் பல இன்னல்களுக்கு ஆளாவார்கள் - பொருளாதாரத் தடை, தொழிலில் முன்னேற்றமின்மை, பெர்சனல் வாழ்விலும் பல இடர்ப்பாடுகள், தோல்விகள், மனவருத்தங்கள்.... உதாரணமாக பாக்யராஜ், இளையராஜா இவர்களின் ஜாதகங்களைக் குறிப்பிடலாம். 

இளையராஜா ஆரம்ப நாட்களில் கிராமத் திருவிழாக்களிலும், நாடகங்களிலும் மிகச் சொற்ப சம்பளத்திற்கு வாசித்துக்கொண்டிருந்தார் என்பதெல்லாம் நாம் அறிந்ததே. அதே போல்தான் பாக்யராஜும்.  ஒரு பிரேக் கிடைப்பதற்கு முன் மிகவும் சிரமப்பட்டே முன்னுக்கு வந்திருக்கிறார். முதல் மனைவி மறைவும் இத்துன்பங்களில் அடக்கிக்கொள்ளலாம். அவர்களின் பிற்பாதி வாழ்க்கையில் அவர்கள் அடைந்த உயரங்கள் நாம் அனைவரும் அறிந்ததே.

என்ன தான் 30 வயதைக் கடந்து விட்டாலும் காலசர்ப்ப தோஷமுடைய வரனுக்குப் பெண் கொடுக்க பெற்றோர் இன்றும் தயங்குகின்றனர். என் நெருங்கிய உறவின்ர் ஒருவரின் பெண்ணுக்கு டாக்டர் வரன் வந்தது. பையன் காலசர்ப்ப ஜாதகம் உடையவன். எனவே உறவினர் மிகவும் தயங்கி பெண் தர மறுத்துவிட்டார். நான் அதான் முப்பது தாண்டியாச்சுல்ல, இனிமே life சூப்பரா தான் இருக்கும். ஏன் refuse பண்றீங்க என்று கேட்டேன். இல்லம்மா என்னதான் 30 தாண்டினாலும் காலம் முழுக்க அந்த effect இருக்கத் தான் செய்யும் என்றார்.

ஜோதிடரீதியாக இவர் சொல்வது தவறு என்று உதாரணங்களோடு வாதிட முடியும். ஆனாலும் உளவியல் ரீதியாக இவர் சொல்வது சரியே. இளவயதில் அனுபவிக்கும் துன்பம், வாழ்நாள் முழுவதிற்குமான ஒரு வடுவை ஏற்படுத்திவிட்டே செல்கிறது. 

உதாரணமாக, ஒரு abusive environmentல் வளரும் குழந்தைக்கு normal family எப்படி இருக்கும் என்று தெரியாது. அக்குழந்தையைப் பொறுத்தவரை அப்பா, அம்மான்னா அடிப்பாங்க என்றுதான் தெரிந்திருக்கும். தான் ஒரு நல்ல பொறுப்பான குடும்பத்தலைவனாகவோ/தலைவியாகவோ ஆகி, தன் பிள்ளைக்கு ஒரு நல்ல குடும்பச்சூழலை ஏற்படுத்திக்கொடுக்கும் பொழுதுதான், தான் தவற விட்டது எது என்பதை அவர்கள் அறிகிறார்கள். ஓ, அப்பா இப்படிலாம் கூட பிள்ளயோட விளையாடலாமா. அம்மா இவ்ளோ happyஆ இருக்கமுடியுமா என்றெல்லாம் தெரியவரும்போது, தான் miss பண்ண ஒவ்வொரு விஷயமும் விஸ்வரூபமெடுக்கிறது. ஒரு விதமான மனக்கஷ்டத்தை ஏற்படுத்தவே செய்கிறது. (மன வளப் பயிற்சிகளால் வெளியே வர முயற்ச்சிக்கலாம் என்றாலும் கூட)

கொடிது, கொடிது இளமையில் வறுமை என்று பாடினார் அவ்வை. இளமையில் அனுபவிக்கும் எவ்விதத் துன்பமும் கொடுமையே. ஏனெனில் ஒரு வாழ்நாளிற்கான காயங்களை ஏற்படுத்திவிட்டே அவை மறைகின்றன.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes