வெகேஷன் எங்கயாவது இந்த வருசம் போயே ஆகணும்னு ஒரு தீர்மானம் (வருசம் போன போக்கு அந்த மாதிரி - மண்ட காஞ்சிருச்சு). இங்க அங்கனு கொழப்பி தென்மலைனு முடிவு பண்ணியாச்சு. அப்புறம் ட்ரிப் அட்வைசர் பாத்து ரிசார்ட்டும் புக் பண்ணியாச்சு. ஆல் செட்.
செந்தூரணி வனவிலங்கு சரணாலயத்தில் நெறய பாக்கேஜ் தருகிறார்கள் . அதிலிருந்து குறுந்தொட்டில் ஃபாரஸ்ட் கேம்ப்பிங் ஆப்ட் செய்திருந்தோம். The day has arrived and we went to Shendureney tourism office . இது கேரள வனத்துறையினரால் ஆர்கனைஸ் செய்யப்படுகிறது . சென்றவுடன் ஒரு ஃபாரம் கொடுத்து நிரப்பச் சொன்னார்கள். டிபிக்கல் கவர்ன்மென்ட் ஆஃபிஸ் சாணித்தாள் . பாதி எழுத்து என்னனே தெரியல. சாராம்சம் இது தான் - ஒங்க உசுருக்கு எதுவும் ஆனா நாங்க பொறுப்பில்ல . எங்க கிட்ட நஷ்ட ஈடு கேக்க கூடாது. நல்ல வேள எல்லா எழுத்தும் தெரியல. இன்னும் பீதியாயிடும். Formalities முடிச்சுட்டு வெளிய வந்தோம் .( கேஷ் மட்டும் தான் அக்சப்ட் பண்றாங்க) ஜீப் ரெடியா இருந்தது . டிரைவர் ஜோஸேட்டன் ( ஜோஸ் சேட்டன் - ரொம்ப ஃப்ரண்ட்லி, 19 வருசம் காட்ல காரோட்றார்). ஒரு கைட், ஒரு ஹெல்ப்பர், ஒரு குக் இவர்களுடன் பயணம் தொடங்கியது .
ஒரு நாலு கிலோமீட்டர் தார் ரோட்ல ஓட்டுனார். அப்புறம் காட்டுப்பாதை ஆரம்பித்தது. எலும்புகள் பார்ட் பார்ட்டா கழன்றும் போல . பத்து வருஷம் முன்னால வந்துருக்க வேண்டிய ட்ரிப்ப வயசானக்கப்புறம் வந்துட்டோமோன்னு யோசிக்கி முடிக்கிறதுக்குள்ள கேம்ப் ஷெட் வந்துருச்சு இறங்குங்கனு சொன்னார் சேட்டன் . கைட் ஜீப்பிலிருந்து ஒரு முப்பதடி தூரத்துல யான நிக்கிது வாங்க பாப்போம்னு கூப்டார் . உதட்டில் விரல் வைத்து அமைதி காக்கச் சொல்றார். பூனை பாதம் வைத்து ஒரு பத்தடி தூரத்தில் அடர்ந்த காட்டில் நின்று யானை சிறு மரக்கிளையை உடைத்து உடைத்து சாப்பிடுவதைப் பார்க்க திகிலாக இருந்தது . ஜோஸேட்டன் , வாசு - என் கணவர், இரு பிள்ளைகள்- 11, 13 வயது அங்கேயே நின்று பார்த்துக்கொண்டிருக்க, நான் பயம் தாங்க முடியாமல் ஜீப்பருகே சென்றேன் . கைட் பிள்ளைகளைக் கூப்பிடுங்க. ஆனெ கேறி வந்தெங்கில் பெரியவங்க ஓடிரலாம். ஆனா சின்னவங்களால ஓட முடியாதுன்னார் . என்னாது ஆனெ கேறி வருமா - அவ்வ்வ்வ், முடியல. இவங்கள எப்புடி கூப்டறதுன்னும் தெரியல .நான் இவங்கள கூப்டு ஆன வந்துருச்சுன்னா???!!!!!. அப்றம் இப்டி அப்டின்னு ஏதோ கேணத்ததனமா சைகைலாம் பண்ணி பசங்க ஒரு வழியா என்னப் பாத்துட்டாய்ங்க.நான் வா வான்னு ரொம்ப விகரஸா கூப்ட்றத பாத்துட்டு தல தெறிக்க ஓடி வர்றாய்ங்க . அட டேய் சத்தம் கேக்காம ஓடி வாங்கடா. யானக்கி கேட்ற போவுது. அதுக்குள்ள ஆனெ வாசுவயும் ஜோஸேட்டனயும் பாத்துட்டு காட்டுக்குள்ள சர சரன்னு எறங்கி போயிருச்சு. கைட் சொன்னார்
காட்டெருமையும், கரடியும் தான் மனுசங்கள தொரத்துமாம் . கொல்லாம வுடாது அப்டீன்னு மலையாளத்துல சொன்னார் சேட்டன். ஆனா
யான மேக்சிமம் மனுசங்கள அவாய்ட் பண்ண தான் ட்ரை பண்ணுமாம். புலியும் அதே. அப்பாடி. இப்ப டாப் ஹட்குள்ள போயிரலாம். நம்ம தங்கப்போற Top hut, jeep நின்ன எடத்துல இருந்து பசுமையான ஒரு முப்பதடி பள்ளத்துல இருக்கு. சுத்தி ஒரு எலக்ட்ரிக் ஃபென்ஸ். ஜீப் கிட்டயிருந்து பாத்தா இப்டி ஒரு Hut இருக்குறதே தெரியல. இவ்ளோ ஸ்டீப்பா எறங்கிலாம் யான வராதுனு டிஸ்கவரி சேனல் ரேஞ்சுக்கு கத வுட்டான் என் மகன். சந்தோசமா நடந்து வந்தேன். பாத்தா ஃபென்ஸ் பக்கத்துல யானச் சாணம். மகள் மகனை நல்லா சாத்துனா . எனக்கு திருப்பி பயம் கெளம்பிருச்சு.
குடில்ல போய் செட்டில் ஆயாச்சு. நம்ம குக் சேட்டன் கட்டன் சாய் குடுத்தார் . Imagine அடர்ந்த காடு, அதன் நடுவே ஏழே ஏழு பேர், காட்டின் பேரமைதி, திடீரென்று அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு கிளம்பும் ஏதோவொரு பறவையின் கூவல், பின்னர் சில்வண்டுகளின் ஒலி, தொலைவில் ரிசர்வாயர், தண்ணீர் பருக வரும் வனவிலங்குகள் - Amazing it was.
குடிலைச் சுற்றி இருக்கும் Fence ஐ ஒட்டிய மரஞ்செடிகள் மிதிபட்டு கிடக்கின்றன. ஆனெ சவட்டி எறிஞ்சு நேத்து அப்டீன்னார் நம்ம கைட் சேட்டன் . மறு நாள் காலை இன்னும் அடர்ந்த காட்டுக்குள் ட்ரெக்கிங். இதுதான் நம்ம பேக்கேஜ். ஜீப்பிலிருந்து Hutக்கு வந்ததே எனக்கு ரொம்ப அட்வன்ச்சரஸ் . இதுல காட்டுக்குள்ள அஞ்சு கிலோமீட்டரா?? ஒரு நிமிசம் தல சுத்திருச்சு 😜.
ட்ரெக்கிங் வந்தா ஆனெ பயம் வரமாட்டேன்னு சொன்னா வாசு பயம் - என்னடா இது மதுரக்கி வந்த சோதன . ஓகே எவ்வளவோ பண்ணிட்டோம் .இதப் பண்ண மாட்டோமா. காலைல சாப்ட்டு போவோம்னு சொன்னார் நம்ம ஹெல்ப்பர். டிஃபன் பாசிப்பயறு புட்டு வாழப்பழம் அப்பளம் சீனி . எத எதுல போட்டு சாப்டுறதுன்னு ஒரு Confusion ல எல்லாத்தயும் கலந்து அடிச்சாச்சு. Then came the moment of the day. Trekking into the dense forest. சேட்டா கரடி வராதுல . ஒரு சிரிப்பு - வரும், எது வேணா வரும் . அது வீட்டுக்குள்ள தான நம்ம போறோம் அப்டீனார் . சேட்டன்மார் அநியாயத்துக்கு உண்ம பேசுறாங்கப்பா. கெளம்பியாச்சு . நாங்க நாலு பேர் நடுல, முன்னாடி ஒரு கைட், பின்னாடி ஒருத்தர் கைல கட்டாரியோட .
கட்டாரி எதுக்குன்னு கேக்கல. அப்றம் காட்டெரும கொல்ல வந்தா தேவப்படும்னு சொன்னாலும் சொல்லுவாரு. இது தேவயா நமக்கு😳. வழியெல்லாம் யானை உரித்த மரப்பட்டைகள், அப்போது போட்ட சாணம், நம்ம சேட்டன் வேற இங்க தான் ஆனெ ரெண்டு பேர சவட்டிக் கொன்னுச்சுன்னு Explanation.
சேட்டா ஆனெ தொரத்துனா எந்தா செய்யின்னு? செர்ரிய மரத்தில் ஏறில்லா . ஆனெ ஒடைக்கும் .ஓட வேண்டியதுதான் ஏதெங்கிலும் தெசயில். Bear grylls இந்த மாதிரி Situation ல என்ன செஞ்சுருப்பார், செருப்பு வாங்கி ஒரு வருசம் ஆயிருுுுச்சே
இந்த பிரச்சனை எல்லாம் யான வந்தா பாத்துக்கலாம் . அது வரை இயற்கையின் அந்தப் பேரழகு, சிட்டுக்குருவி அளவில் பட்டாம்பூச்சி , ததும்பி நிற்கும் ஏகாந்தம் , கணந்தோறும் தோன்றும் வியப்புகள் - கண்ணிரண்டு போதவில்லை . வாழ்வின் மறக்க முடியாத 5 கிலோமீட்டர். மகன் மெதுவாக என்னிடம் கேட்டான் Are you scared? Yes I am scared , fascinated , thrilled . But enjoying and loving every step of this trail - just like life .
Just like life என்று முணுமுணுத்துப் புன்னகைத்துக் கொண்டான் என் மகன்
( இரண்டு காட்டு யானைகள், மலபார் அணில், கருங்குரங்கு இதெல்லாம் பாத்தோம் If you're particular about it 😊)
Friday, May 25, 2018
தென்மலை ஈகோ டூரிசம் - ஆனைகளின் அருகே
1:53:00 PM
மாலா வாசுதேவன்
1 comment
1 comments:
Thank you for taking time to read and comment kavi
Post a Comment