வேலன்டைன்ஸ் டே
நெருங்கி விட்டது. காலேஜ் வாசலில் ஃபுல்லும் ரெட்ரோஸ் விற்பனை. காலேஜ் காண்டீனில் கேட்பரி
சில்க் தான் ஜாஸ்தி விற்பனையாவதாகத் தகவல் .
ஆதலினால் காதல்
செய்வீர் உலகத்தீரே,
அஃதன்றோ இவ்வுலகத்
தலைமையின்பம்
என்றான் பாரதி.
அடலஸன்ட் வயதில்
ஒரு மிகக் கொடுமையான தனிமை ஒன்று வந்து மனதில் கவிந்திருக்கும். அன்பான பெற்றோர், சகோதரன்,
சகோதரி, ஆகச்சிறந்த நண்பர்கள் எல்லோரும் இருந்தும் யாருமே இல்லாதது போன்ற ஒரு துக்கம்
மனதை அரிக்கும். சில நிமிடங்கள் தனித்திருந்தாலும், இத்துக்கம் மனதை ஆக்கிரமித்துக்கொள்ளும்.
அதே நேரம் ஃபிஸிக்கலி தனித்திருக்கவேண்டும் என்றும் தோன்றும்.
'Solitude
has soft, silky hands, but with strong fingers it grasps the heart and makes it
ache with sorrow.' – கலீல் கிப்ரான்
மனமெனும் மண்டபம்
மவுனமாய் உள்ளது, யாரது யாரது மாயாஜாலமாய் உள்ளது,...