முன்னாடிலாம் வீட்லருந்து டூர் போனா திருச்செந்தூர் or மதுர அழகர்கோவில் or மலைக்கோட்டை, அதோட சேத்து முக்கொம்பு or குற்றாலம், கொஞ்சம் பெரிய டூர்னா ஊட்டி, கொடைக்கானல். அவ்ளோதான்.
இப்ப டூர்ஸ் லெவலே வேற - ரிலிஜஸ் டூர் பேக்கேஜஸ், ஈகோ டூரிஸம் - அங்கயே டென்ட் அடிச்சு தங்குறது (ஒரு ஊர்ல வெட்டவெளில - சுத்தி மரம், ஆறு இருக்கு- ரெண்டு கட்டில் போட்டு வச்சு இருக்காய்ங்க- அங்க தங்குறதுக்கு 220 யூரோ per nightஆம். நம்ம மொட்டமாடி கூட நல்லாத்தான் இருக்கு), அட்வன்ச்சர் டூரிஸம், ஃபுட் டூர், டார்க் டூரிஸம்.
இதில் டார்க் டூரிஸம் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த (பெரும்பாலும் நெகட்டிவ் ரீசன்ஸ் - war, poverty, genocides- இவை போல) இடங்களுக்குச் செல்வது. நம் இந்தியாவைப்பொருத்த வரையில் ஜாலியன் வாலாபாக், அந்தமான் செல்லூலார் ஜெயில், போபால் விஷ வாயுவினால் மக்கள் உயிரிழந்த இடம் ஆகியவை டார்க் டூரிஸ் ட்ஸ்பாட்கள்...