இசையரசி M.S.சுப்புலட்சுமி அவர்களின் நூற்றாண்டு சமீபத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அவர் நினைவைக் கவுரவிக்கும் விதமாக ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் இசை நிகழ்ச்சி ஒன்றும் ஐ.நா சபையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுகளை ஒட்டி சுப்புலட்சுமி அம்மையார் அவர்களின் பேத்தி முறை உறவான கவுரி அவர்களின் பேட்டி ஒரு நாளிதழில் வெளியாகியிருந்தது. அதில் அவர் சொல்லும் சில தகவல்கள் கொஞ்சம் சர்ப்ரைசிங்காக இருந்தன. M.S.சுப்புலட்சுமி அம்மையார் அவர்களின் கணவர் திரு. கல்கி சதாசிவத்தை, தமிழ் ஹிட்லர் என்று அழைப்பார்களாம். M.S.சுப்புலட்சுமி அவர்கள் எந்தக் கச்சேரியில் பாட வேண்டும், என்ன பாடல் பாட வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்தையும் முடிவு செய்தது சதாசிவம் தான்.
இதை மேன்ஸ்ப்ளயினிங் (Mansplaining) என்கிறார்கள். அதாவது, எல்லா விஷயங்களையும் ஒரு ஆண் என்ற தோரணையில் விளக்குவது, ஆதிக்கம் செலுத்துவது. குடும்பங்களிலும், வேலை பார்க்கும் இடங்களிலும் இதை நீங்கள் பரவலாகப் பார்க்கலாம். நீங்கள் ஒரு துறையில் வல்லுனராக, பல வருட அனுபவத்துடன் இருப்பீர்கள். ஆனால் உங்களைவிட அனுபவத்திலும், திறமையிலும் மிகக் குறைந்த ஒரு ஆண், மேடம் இத இப்டி செய்ங்க, அப்டி செய்ங்க என்பார். அதீத எரிச்சலைக் கொடுக்கும் இந்த ஆட்டிட்யூட். எம்.எஸ். அம்மா ஒரு ட்ரெயின்ட் புரபொஷனல். ஆனால் அவர் ஒரு ரசிகரின் (கல்கி சதாசிவத்தின்) ஆலோசனைப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றால் இது அவரின் உலகம் போற்றும் திறமைக்கு ஒரு கவுரவக் குறைச்சலே.
குடும்பத்திலும் தன் வயதுக்கு மீறிய விஷயங்களில் தலையிடுவது, தன் அம்மா, அக்ககாவையும் மீறி ஆலோசனை சொல்வது, உதாரணமாக கல்யாணம் ஆகப்போகும் அக்காவுக்கு அட்வைஸ் அள்ளிவிடும் 6,7 வயது குறைந்த தம்பி ஸ்ஸஸஸப்ப்பாஆஆ
திறமைகளை மதிப்பதாலும் அங்கீகரிப்பதாலும் ஒருவர் எந்த விதத்திலும் தாழப் போவது இல்லை. இதை மனதில் கொள்ளுதல் ஆரோக்கியமான குடும்பச்சூழலுக்கும், அலுவலகச்சூழலுக்கும் வழிவகுக்கும்.