Monday, August 15, 2016

ஆண்- பெண் நட்பு உறவுச்சிக்கல்கள்

இன்று ஒரு இருபதாண்டுகளுக்கு முன் இப்படி ஒரு பிரச்சினை நிலவியிருந்திருக்குமா, சந்தேகமே. லேட் 70ஸ் மற்றும் ஏர்லி 80க்களில் பிறந்த மத்திய வயதைச் சேர்ந்தவர்கள் எதிர்நோக்கியுள்ள புதிய வகைப்பிரச்சினை இது.
50, 60களில் இருபாலினரும் சேர்ந்து படித்திருந்தாலும், பெர்சனலாக எதிர்பாலினத்தவரைச் சேர்ந்த நண்பர்கள் இருந்திருப்பது கடினம். ஒரு குழுவாக நண்பர்களாகப் பழகியிருந்திருக்கலாம். ஆனால் தனியாக  ஒரு பெண் தன் நண்பனோடு அல்லது ஒரு ஆண் தன் தோழியோடு நேரம் செலவிடுவது என்பது இல்லை. 
இன்றைய சூழலில், 30களில் மற்றும் 40ன் துவக்கத்தில் இருப்போருக்கு மேற்சொன்னது போன்ற எதிர்பாலின நண்பர்கள் சர்வசாதாரணமாக இருக்கின்றனர். முக்கால்வாசிப்பேர் கல்லூரிக்கால வாட்ஸப் குரூப்பில் மெம்பராக இருக்கின்றார்கள். பழைய நண்பர்களோடு இன்றும் நேரம் செலவிடுகின்றனர். எந்தப்புள்ளியில் இது பிரச்சனையாக மாறுகிறது என்பதை அலசுவது need of the hourஆக உள்ளது.
வேல்யூஸ் என்பது மூன்று வகையாக உள்ளது - பெர்சனல் வேல்யூஸ், சொசைட்டல் வேல்யூஸ் மற்றும் மாரல் வேல்யூஸ்.

பெர்சனல் வேல்யூஸ் - நான் இப்படித்தான். நான் என்ன செய்கிறேன் என்பது எனக்குத் தெரியும். மற்றவர் நினைப்பபது பற்றி எனக்கு கவலையில்லை - ஒரு தடவ முடிவு பண்ணிட்டா, அப்றம் என் பேச்ச நானே கேட்க மாட்டேன் ரகம்.

சொசைட்டல் வேல்யூஸ் - ஒரு சாரார் சரி என்று கருதுவதைப் பொதுமைப்படுத்திவிடுவது. உதாரணமாக, போர்னோ பார்ப்பது இந்தக்காலத்தில் தவறில்லை, ஒரே பாலினத் திருமண்ம் சரி போன்றவை. 

இந்தப்பிரிவில் வருவது தான் ஆண்-பெண் நட்பும். இன்றைய தேதியில் இதில் தவறொன்றும் இல்லை. தவிர்க்க முடியாது என்பது சமுதாயத்தின் வேல்யூ. நட்பு, நட்பின் புனிதத்தோடு இருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். எந்த முறையற்ற உறவும் உண்டாகவில்லை - நல்ல நண்பர்களாகவே தொடர்கின்றனர். நேரம் செலவிடுகின்றனர். ஒருவர் குடும்பத்தைப் பற்றி மற்றவர் அக்கறையோடும் அன்போடும் இருக்கின்றனர் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் சம்பந்தப்பட்ட ஆண்-பெண்ணில் யாரோ ஒருவரின் வாழ்க்கைத்துணைக்கு இந்த நட்பு பிடிக்கவில்லையெனில், நட்பைத் துண்டித்துக் கொள்வதே மாரல் வேல்யூ.  

நட்பை விட, வேறு எந்த சமூகக்கூறுகளையும் விட குடும்பம் என்ற அமைப்பே மேலானது. நீங்கள் நல்லநண்பர்கள் தான், நட்பைத் தாண்டி வேறொன்றும் உங்கள் இடையே இல்லை. ஒப்புக்கொள்கிறோம். ஆனாலும் உங்கள் வாழ்க்கைத்துணைக்குப் பிடிக்கவில்லையா - விலகிவிடுங்கள். நட்பு இந்த விலகலையும் புரிந்து கொள்ளும், தள்ளி நின்று உங்கள் வளர்ச்சியில் மனம் மகிழும். நட்பில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை - உங்களின் நலத்தைத் தவிர

10 comments:

Umadevi said...

True Padma...very well narrated...

raji vanchi said...

மிக அருமையான பதிவு பத்மமாலா. நிகழ்கணத்திற்கு மிக தேவையான பதிவும் கூட. எதை இழந்து எதை பெறுகிறோம் என்று ஒரு அறிவு நிலையில் நின்று செயல் படவேண்டிய காலத்தில் நாம் அனைவரும் நிற்கிறோம் ..இதில் வயது பேதமில்லை

வருண் said...

இந்தப்பக்கம் நான் முதல் முறை வருகிறேன்.

என்னுடைய புரிதல் என்னனா பெண்ணடிமைத்தனம் நிறைந்ததுதான் நம் கலாச்சாரம், பண்பாடு. பெண்ணை அடிமை செய்த ஆண், அதற்கு பரிகாரமாக பெண்ணை மதித்தான், வணங்கினான். தான் செய்யும் தவறை சரிக்கட்ட இப்படி எல்லாம் செய்தான்.

இன்னைக்கு பெண்கள் அப்படியெல்லாம் வாழமுடியாது. எனக்கு ஃபைனான்ஸியல் இண்டிப்பெண்டென்ஸ் வேணும். குடிகாரனையும், பொறுக்கியையும் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் என்றெல்லாம் ஏத்துக்க முடியாதுனு வெளிய வந்துட்டாங்க.

இந்த ஒரு சூழலில் ஆண்கள், பெண்களை தெய்வமாக வணங்கவோ, மதிக்கவோ செய்வதில்லை. ஏன்னா பெண், ஆணுக்கு சமமாகி விட்டாள். இனிமேல் அவன் எப்படி இன்னொரு ஆணை அவன் தரத்த்துக்கேற்ப நடத்தினானோ அதேபோல்தான் நடத்தப் போறான். சரியா?

பெண்கள் புரிந்து கொள்ள வேண்டியது..சமம்னு வந்துட்டா, "பெண், தாய்" என்கிற மரியாதை எல்லாம் கெடைக்காது "பொம்பளை அல்லது பெண்" என்கிற சம மரியாதைதான் கிடைக்கும் என்பதை.

சரி, ஆண்-பெண் உறவு..

ஆணோட பழகுவது ஒரு மாதிரியான வம்புதான்.

என்ன செய்றது? ஒரு சிலருக்கு சாதாரண வாழ்க்கை பிடிக்க மாட்டேன் என்கிறது. பிரச்சினைகள் அதிகமாக் இருந்ந்தால் அதை சமாளிக்கவே நேரம் போதாது. பிரச்சினை இல்லை "போர்" அடிக்கிது என்கிறபடி ஒரு சிலர் யோசிக்கும்போது... இதுபோல் நட்பு எல்லாம் தவறில்லைனு போறாங்க. அதில் ரிஸ்க் நிச்சயம் இருக்கத்தான் செய்யுது.

ஆம்பளையோட பழகும்போது பாம்போட பழகுவதுபோல்தான் பழகணும் என்பது எக்காலத்திலும் உண்மைதான். அவன் எந்த ஆபம்பளையா இருந்தாலும் சரி.

But, the choice is individual's. You and I cant tell them what to do and what is right or wrong as long as that individual is an adult. Some are going to get into trouble and their life is going to get complicated. Later, after they got into trouble, they may feel that they should have thought about this blah blah. After all these, they will become a "philosopher" and advise others..like our writer Balakumaran! lol

***நட்பை விட, வேறு எந்த சமூகக்கூறுகளையும் விட குடும்பம் என்ற அமைப்பே மேலானது.***

Everyone's family settings are different. There are BAD moms and BAD dads too. I am not sure you can generalize based on what kind of family you have got. Every individuals family situation can be unique and some of them might not be lucky abnd some others are not.

Your suggestion might work for some people. Not for all people!

மாலா வாசுதேவன் said...

Thanks Varun for reading n giving a good review. Again I say, let's avoid being bad mom or dad. Let's give a beautiful family for our children. It's each and every single adult's responsibility. Family must be of prior importance. Balakumaran - பசுத்தோல் போர்த்திய புலி

மாலா வாசுதேவன் said...

Thank you for taking time to read n comment shri vanchi :)

மாலா வாசுதேவன் said...

Thank you Uma for your valuable comment

Unknown said...

a thought provoking article ji

Unknown said...

a thought provoking article ji

Unknown said...

a thought provoking article ji

Yaathoramani.blogspot.com said...

மிக மிக அருமையான
குழப்பாத தெளிவான கருத்தும்
எழுதிப்போனவிதமும் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes