Friday, November 18, 2016

சைத்தான் படத்தின் கதை எழுத்தாளர் சுஜாதாவினுடையது

சைத்தான் படத்தின் ட்ரைலரும் முதல் ஐந்து நிமிட வீடியோவும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மிரட்டலாக வந்திருப்பதாகச் சொல்லப்பட்ட வீடியோவை ஆர்வமாக எடுத்துப் பார்த்தால் அப்படியே சுஜாதாவின் நாவல் 'ஆ' படமாக்கப்பட்டிருக்கிறது. கதாபாத்திரங்களின் பெயர்கள் கூட மாற்றப்படவில்லை. எழுத்தாளருக்கு எங்கும் எதிலும் க்ரெடிட் தரப்படவில்லை. ஷாக்கிங். Vijay Antony இசையமைப்பாளராகவும்அடுத்தவர்களின் இசையைத் திருடுவதற்குத் தயங்கியதே இல்லை (ரிஹானா). இப்போது கதையையும் அபேஸ் பண்ணத் துவங்கிவிட்டார். அதுவும் ஒரு மிகப்பிரபலமான  எழுத்தாளரிடமிருந்து. இது கண்டனத்துக்குரியது. * பிற்சேர்க்கை - நண்பர்களே இன்று எழுத்தாளர் சுஜாதாவின் பெயர் விக்கிப்பீடியா சைத்தான் பக்கத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது. மகிழ்ச்சி 😁 - 18.11.16, 11.2...

Monday, September 26, 2016

இசையரசி M.S.சுப்புலட்சுமியும் மேன்ஸ்ப்ளயினிங்கால் பாதிக்கப்பட்டவர்தானோ

இசையரசி M.S.சுப்புலட்சுமி அவர்களின் நூற்றாண்டு சமீபத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அவர் நினைவைக் கவுரவிக்கும் விதமாக ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் இசை நிகழ்ச்சி ஒன்றும் ஐ.நா சபையில் நடைபெற்றது. இந்நிகழ்வுகளை ஒட்டி சுப்புலட்சுமி அம்மையார் அவர்களின் பேத்தி முறை உறவான கவுரி அவர்களின் பேட்டி ஒரு நாளிதழில் வெளியாகியிருந்தது. அதில் அவர் சொல்லும் சில தகவல்கள் கொஞ்சம் சர்ப்ரைசிங்காக இருந்தன. M.S.சுப்புலட்சுமி அம்மையார் அவர்களின் கணவர் திரு. கல்கி சதாசிவத்தை, தமிழ் ஹிட்லர் என்று அழைப்பார்களாம். M.S.சுப்புலட்சுமி அவர்கள் எந்தக் கச்சேரியில் பாட வேண்டும், என்ன பாடல் பாட வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்தையும் முடிவு செய்தது சதாசிவம் தான். இதை மேன்ஸ்ப்ளயினிங் (Mansplaining) என்கிறார்கள். அதாவது, எல்லா விஷயங்களையும் ஒரு ஆண் என்ற தோரணையில் விளக்குவது, ஆதிக்கம் செலுத்துவது. குடும்பங்களிலும், வேலை பார்க்கும்...

Wednesday, August 24, 2016

பெண்களைக் கவரும் ஆல்ஃபா ஆண்கள் - நீங்கள் இவ்வகையா

ஆல்ஃபா ஆண்கள் என்றால் யார்? சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் நம் திரைப்படங்களில் நாம் வழிபடும் ஹீரோக்கள் தான் ஆல்ஃபா வகை ஆண்கள். எதிலும் எளிதில் முடிவெடுக்கக்கூடியவர்களும், பிரச்சினைகளைத் தைரியமாக எதிர்கொள்ளக் கூடியவர்களாகவும் இருப்பவர்கள் இந்த ஆல்ஃபா வகை ஆண்கள். தடைகளைத் தாண்டி, இலக்கை அடைவது வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு செயல்படுவது இவர்களின் தனிச்சிறப்பு. இவர்கள் எங்கும் எப்போதும் கொடுப்பவர்கள், பெறுபவர்கள் அல்ல. புறம் பேச மாட்டார்கள்.ஒரு குழுவாகச் செயல்படும்போது, தன்னுடைய வேலையை மட்டுமின்றி குழுவில் ஒவ்வொருவரும் என்ன வேலை செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாகத் தீர்மானிப்பவர்கள்.இவ்வளவு திட்டமிடலுக்கும் மெனக்கெடலுக்கும் பின்னும் ஒரு தோல்வி நேருமேயானால், அதில் துவண்டு விடாமல், வீழ்வேனென நினைத்தாயோ என மீண்டெழும் நெஞ்சுரம் கொண்டவர்கள். யாருடைய பரிதாபத்தையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள். பெண்களைப்...

Wednesday, August 17, 2016

வாட்ஸப் க்ரூப் அட்ராசிட்டீ

வாட்ஸப் பயன்படுத்தும் எல்லோருக்கும் இப்படி ஒரு அனுபவம் இருக்கும் - சம்மந்தமே இல்லாத ஏதோ ஒரு குரூப்பில் யாராவது ஒருவர் நம்மைச் சேர்த்துவிட்டு இருப்பார்கள். நாமும் தேமேயென்று மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் மெம்பர்களாகத் தொடர்ந்து கொண்டிருப்போம்.   தினமும் குட்மார்னிங் 20, குட்நைட் 30 - இமேஜுகளை டெலிட் செய்வதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். திடீரென்று ஒரு நாள் ஒரு 50 மெசெஜஃ பிறந்தநாள் வாழ்த்துக்கள் - நாமும் விஷஃ பண்ணுவதா வேண்டாமா. ஏதோ ஒரு டாபிக்கில் விவாதம் - அமெரிக்காவில் அவர்கள் இருக்கும் பிரதேசத்தில் ஏதோ தமிழ் மீட்டிங், அங்கே பொழியப்போகும் பனிமழை எச்சரிக்கை, புட்பால் மேட்ச், ஹல்லாரி-ட்ரம்ப் மோதல், அவர்கள் சம்மரில் கோல்ப் விளையாடப்போவது - இதே ரீதியில் அவர்கள் பேசிக்கொண்டே போகும் போது - நாம் வடிவேலு பாணியில் - என்னடா நடக்குது இங்க என்று நெளிய வேண்டியதுதான். சரி வெளியே வந்துவிடலாம்...

Monday, August 15, 2016

ஆண்- பெண் நட்பு உறவுச்சிக்கல்கள்

இன்று ஒரு இருபதாண்டுகளுக்கு முன் இப்படி ஒரு பிரச்சினை நிலவியிருந்திருக்குமா, சந்தேகமே. லேட் 70ஸ் மற்றும் ஏர்லி 80க்களில் பிறந்த மத்திய வயதைச் சேர்ந்தவர்கள் எதிர்நோக்கியுள்ள புதிய வகைப்பிரச்சினை இது. 50, 60களில் இருபாலினரும் சேர்ந்து படித்திருந்தாலும், பெர்சனலாக எதிர்பாலினத்தவரைச் சேர்ந்த நண்பர்கள் இருந்திருப்பது கடினம். ஒரு குழுவாக நண்பர்களாகப் பழகியிருந்திருக்கலாம். ஆனால் தனியாக  ஒரு பெண் தன் நண்பனோடு அல்லது ஒரு ஆண் தன் தோழியோடு நேரம் செலவிடுவது என்பது இல்லை.  இன்றைய சூழலில், 30களில் மற்றும் 40ன் துவக்கத்தில் இருப்போருக்கு மேற்சொன்னது போன்ற எதிர்பாலின நண்பர்கள் சர்வசாதாரணமாக இருக்கின்றனர். முக்கால்வாசிப்பேர் கல்லூரிக்கால வாட்ஸப் குரூப்பில் மெம்பராக இருக்கின்றார்கள். பழைய நண்பர்களோடு இன்றும் நேரம் செலவிடுகின்றனர். எந்தப்புள்ளியில் இது பிரச்சனையாக மாறுகிறது என்பதை அலசுவது need...

Page 1 of 3612345Next

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes