ஆண்மையைக் குறித்து பல்வேறு ஐடியாக்கள் எக்காலத்திலும் நிலவி
வருகின்றன. அவற்றுள் மிக முக்கியமானது – ஆண் தன்னுடைய எமோஷன்களை வெளியே காட்டாமல்
இருப்பது. ஒரு ஆண்மகன் தன் வருத்தத்தையோ, அழுகையையோ பிறர் பார்க்கக் காட்டுவது
பலவீனத்தின் அறிகுறியாகக் கருதப்படுகின்றது. வீட்டில் உள்ளோரும் இதை சாதாரணமாகச்
சொல்லிக்கொண்டேயிருக்கின்றனர். ‘என்னடா பொம்பளப்புள்ள மாதிரி அழுவுற’ என்பது சர்வசாதாரணமாக எல்லா வீடுகளிலும் சொல்லப்படும்
ஒரு வசனம். பல்வேறு ஊடகங்கள் வழியாகவும் இக்கருத்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
ஆனால் தன்னைப் பார்த்து பார்த்து வளர்த்த அப்பா, அம்மாவின் மறைவுக்கே
அழாமல் கல் மாதிரி நிற்கமுடியுமேயானால் இப்படி ஒரு மனிதனால் யாரை முழுமையாக
நேசிக்க முடியும். இதில் ஆணென்ன, பெண்ணென்ன. தன் தாயாருக்காகக் கண்ணீர் வடிக்கும் ஒரு
ஆண். அவ்வப்போது...