சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி துவக்கத்தில் மாமியார் மருமகள் பிரச்சினை, கணவன் மனைவியிடையே வரும் ஈகோ பிரச்சினை, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையே இருக்கும் சிறு சிறு மனத்தாங்கல்கள் என இவ்வகை பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்லிக்கொண்டிருந்தனர். அனேக எபிசோடுகள் நன்றாக இருந்தன.
அப்படியே மெதுவாக கணவன் வேறு பெண்ணோடு தொடர்பு கொண்டான், மனைவி வேறொருவனோடு கள்ளத்தொடர்பு என்று ஆரம்பித்து, மகளிடம் தவறாக நடக்கும் தந்தை, மகனுடைய தோழனோடு உறவு கொள்ளும் தாய் என்று மூன்றாம், நான்காம் தர ஆபாச வெப்சைட் மற்றும் பத்திரிக்கைகளின் உள்ளடக்கத்தைப்போல சொல்லவும், நினைக்கவும் மனம் கூசும் விதமான வக்ரங்களை ஒளிபரப்பி வருகின்றனர். இவற்றுக்குக் கட்டாயமாக ஒரு சென்சார் தேவை.
இருப்பதைத்தானே காட்டுகிறோம் என்பது ஒரு அபத்தமான வாதம். இருப்பதையெல்லாம் காட்டிவிட முடியுமா? அப்படி காட்ட வேண்டியதன் அவசியம்தான் என்ன? விழிப்புணர்வை...