விஜய் டிவி நீவெஒகோ (இங்கிலிஷ்ல மட்டும் தான் கேபிசியா? நாங்களும் சுருக்குவோம்ல) ஷோவில் கமல் கலந்து கொண்ட நிகழ்ச்சி வழக்கம்போல் கான்ட்ரவர்ஸியில் சிக்கிக்கொண்டுள்ளது - ஆனாலும் ஷோவில் பெண்கள் கொஞ்சம் ஓவராகத்தான் செய்தார்கள். கமல் அதில் ஜெயமோகன் அவர்களின் அறம் என்ற புத்தகத்தைப்பற்றி தெரிவித்தார். கண்களில் நீர்மல்க படித்த ஒரு புத்தகம் என்றார். உடனே வாங்கினேன் (டயல்ஃபார்எபுக் மிகச்சிறப்பாகச் செயல்படுகின்றனர்). உண்மையில் கரைந்து போனேன்.
பொதுவாக இப்போதைய பிரபல எழுத்தாளர்கள் சாருநிவேதிதா,எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன் போன்றோரின் எழுத்துக்கள் என்னைக் கவரவில்லை, அனேக எழுத்துக்கள் எனக்குப் புரியவும் இல்லை.
தேவனும் அசுரனும் கலந்தவன் மனிதன். நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு சிறிய உரசலிலும் நம்முள் இருக்கும் அசுரன் தலை காட்டி விடுகிறான். கோபம், பொறாமை, கீழான இச்சைகள், மனக்கசப்பு இத்தியாதிகள். ஆனால்...