வயதும் புறத்தோற்றமும் பிரதானமான விஷயங்களாக இருக்கும் திரைத்துறையில் அஜித் ஒரு ஆச்சர்யம். அவருடைய சால்ட் அன் பெப்பர் லுக்கைப் பார்க்கும் போது உண்மையில் ஆச்சர்யமாக இருக்கிறது. வயதை இவ்வளவு வெளிப்படையாகத் தெரிவிக்கும் நடிகரும் இவராகத்தான் இருப்பார் என்று நினைக்கிறேன். விக்ரமிடம் ஒரு பேட்டியில் அவர் வயதைக் கேட்டபோது தெரிவிக்க மறுத்துவிட்டார். இது வரையில் அவர் பிள்ளைகளின் போட்டோவையும் வெளியிட்டதில்லை (உத்தேசமாக அவர் வயதைக் கணக்கிட்டு விடலாம் அல்லவா).
...