இன்றைய செய்திகளில் ஒன்று இது - ஹங்கேரிய பிரதமர் பால் ஸ்மித் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார். காரணம் இவர் தனது பிஹெச்டி தீஸிஸைக் காப்பியடித்து எழுதி சப்மிட் செய்துள்ளார். இதனால் இவரது டாக்டர் பட்டத்தையும் பல்கலைக்கழகம் பறித்துக்கொண்டது. இதை கேள்விப்படும்போது நம் நாட்டு பிஹெச்டியின் தரத்தைப் பற்றி யோசிக்க வேண்டியுள்ளது.
பிஹெச்டி செய்வதற்கு PG டிகிரி முடித்திருக்கவேண்டும். M.Phil முடித்திருந்தால் பிஹெச்டி 2 வருடத்தில் முடித்துவிடலாம். இல்லாவிட்டால் 3 வருடம். நம் ஆராய்ச்சி மாணவர்களின் தரம் எந்த அளவில் இருக்கிறது? ஆராய்ச்சி மாணவர்களுக்குப் பல்வேறு ஸ்காலர்ஷிப்புகள் availableஆக இருக்கின்றன. JRF க்ளியர் செய்பவர்களுக்கு மாதம் ரூ.14000 scholarship. எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு மாதம் ரூ.14000 ராஜீவ்காந்தி fellowship, இவை தவிர தனிப்பட்ட மனிதர்கள் வழங்கும் endowment scholarship அனைத்தும் கிடைக்கிறது. லேப் வசதிகள், லைப்ரரி வசதிகள், போக்குவரத்தில் சலுகைகள் இவ்வளவும் கிடைக்கப்பெறுகிறார்கள்.
அனைத்தும் இருந்தும் ஒரு path breaking, innovative invention என்பது ஏன் இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது? முக்கிய காரணம் - மாணவர்களின் சோம்பேறித்தனம், பொறுப்பெடுத்துக் கொள்வதில் காட்டும் சுணக்கம். அனைத்து வசதிகளையும் அரசிடம் இருந்து பெறும் ஆராய்ச்சி மாணவர்கள் உழைக்கப் பயப்படுகின்றனர். இவர்கள் படிக்கவோ, புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளவோ ஆர்வம் காட்டுவதில்லை என்பது கசப்பான உண்மை. Exceptions - விதிவிலக்குகள் நிச்சயம் இருக்கிறார்கள். ஆனால் மிகக் கம்மியான சதவீதத்தில்.
2 வருடம் சும்மா பொழுதைப் போக்கும் ஆராய்ச்சி மாணவர்கள், 3வது வருடத்தில் தீஸிஸ் என்ற பெயரில் எதையாவது எழுதிக்கொடுத்து கடனைக் கழிக்கிறார்கள். இதை எழுதிக்கொடுக்கவென்று சென்னையில் மூலைக்கு மூலை நிறுவனங்கள் இருக்கின்றன. இவர்கள் செய்வது cut and paste வேலைதான். பிற ஆசிரியர்கள் எழுதிய புத்தகங்களிலிருந்து அப்படியே சுட்டு அதை ஒரு அவியலாக்கி ஒரு ஆராய்ச்சி முடிவாகக் கொடுக்கிறார்கள்.
இந்த தீஸிஸ், வெளிநாட்டுப் பேராசிரியர்களின் ரெவ்யுவுக்காக வெளிநாடு செல்லும். ஒரு முறை இப்படி அனுப்பப்பட்ட ஒரு தீஸிஸ், அந்த ஆராய்ச்சி மாணவர் எந்தப் பேராசிரியரின் புத்தகங்களிலிருந்து காப்பியடித்தாரோ அவர் கைக்கே ரெவ்யுவுக்குப் போய்விட்டது. பலர் இதே வேலையைச் செய்தாலும் அம்மாணவரின் கெட்ட நேரம் - அவர் மாட்டிக்கொண்டார். மாட்டாத ஆயிரக்கணக்கானோர் சுற்றிக்கொண்டிருக்கின்றனர். பின்னர் அம்மாணவர் தண்டிக்கப்பட்டார்.
Plagiarism என்பது மிகப் பரவலாக ஆராய்ச்சி மாணவர்களிடையே உள்ளது. இதைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் போதுதான் நம் நாட்டில் ஆராய்ச்சியின் தரம் உயரும்.
3 comments:
மாலா மேடம்
வணக்கம் உங்களுக்கு எழுதுறதுக்கு வேற subject எ கிடைக்கலையா....
எங்க பிழைப்புல மண் அள்ளி போடுறா மாதிரி தெரியுது....
நாங்க நீங்க சொல்ற மாதிரி விழுந்து விழுந்து ஆராய்ச்சி பண்ணினா மட்டும் indian government எங்கள recognize பண்ணி award தர போறாங்களா?? அல்லது எங்க அரசியல்வாதி களுக்கு ஆராய்ச்சி பத்தி சொன்னா புரியிற மாதிரி தரத்துல இருக்காங்களா....
இதுல நீங்க மெயின் ஹீரோக்கள் guide அப்படினுரா கதாபாத்திரத்தை சொல்லவே இல்லையே....
எங்க guide கூட உங்க blog visitor தான்......so no comments..............அவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க வல்லவங்க நாலு தெரிஞ்சவங்க.....அவங்க பிள்ளைங்க ஸ்கூல் homework நம்ம கிட்ட நெட்ல download பண்ண சொல்ல மாட்டாங்க,அவங்க class notes நம்ம கிட்ட தர மாட்டாங்க,office work நம்ம பண்ணி தர வேண்டாம்,அவங்க wife கு ஸ்கூட்டி டிரைவ் பண்ண சொல்லி தர வேணாம்,அவங்க students assignments நாம correct பண்ண வேண்டாம்,அவங்க மக்கு பசங்களுக்கு நம்ம காலேஜ் ல செஅட் வாங்கி தர வேண்டாம்.....ரொம்ப நல்லவங்க......
அன்புக்குரிய பிரேமா அவர்களுக்கு, வணக்கம். தங்கள் கமெண்ட்டைப் பார்த்தேன். தங்கள் கைடும் இதைப்பார்ப்பார் என்று தெரிவித்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி. இதிலிருந்து நான் என்ன புரிந்துகொண்டேன் என்றால் - தாங்கள் இந்த ஜென்மத்தில் பிஹெச்டி முடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டீர்கள் போல. வாழ்த்துக்கள் ;)
//தாங்கள் இந்த ஜென்மத்தில் பிஹெச்டி முடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டீர்கள் போல. வாழ்த்துக்கள் ;)//
பாவம் அந்த ப்ரேமா ..
:-(
Post a Comment