உலகப்பொருளாதாரம் ஆட்டம் கண்ட நிலையில், இந்தியப்பொருளாதாரம் நிலையாகவே இருந்தது. உலகில் பல்வேறு வங்கிகள் மூடப்பட்ட போது எஸ்.பி.ஐ யின் லாபம் உச்சத்திலிருந்தது. இந்த அடிப்படை பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பயன்படுத்தி அன்னிய முதலீட்டாளர்களை நம் பக்கம் ஈர்க்க நமக்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பம் - காமன் வெல்த் கேம்ஸ். அது முடிந்து நாம் பட்ட கேவலம் - சந்தி சிரித்தது எல்லாம் பழைய கதை. அதைப் பற்றி இப்போது பேச வேண்டியதன் அவசியம் என்ன? காரணம் ரிக் பிர்ச்.காமன் வெல்த்தின் ஓப்பனிங் செரிமனி உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.(www.youtube.com/watch?v=jZOhfEJc2e8 )மிக அருமையான லேசர் ஷோ, வாண வேடிக்கைகள். இதனை வடிவமைத்து செயல்படுத்தியவர்தான் ரிக் பிர்ச். இவர் 6 ஒலிம்பிக் போட்டிகளில் நிகழ்ச்சிகளை ஆர்கனைஸ் செய்தவர். இவ்வளவு அனுபவம் வாய்ந்த இவரது கருத்தை அடிப்படையாகக் கொண்டு பிபிசி ரேடியோ சமீபத்தில் ஒரு கேள்வியை எழுப்பியது...