நான் என் மனைவிக்கே விசுவாசமாக இல்லை. இப்படிச் சொல்லிக்கொள்வதில் எந்த வருத்தமும் இல்லை - படப்பெட்டி சினிமா இதழ் வெளியீட்டு விழாவில் பாலுமகேந்திரா வெளியிட்டுப் பேசியது.தமிழ்நாட்டின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர்; தனது பெரும்பான்மையான படங்களில் (மீண்டும் கோகிலா, மறுபடியும், ரெட்டைவால் குருவி, சதிலீலாவதி) கணவன் வேறொரு பெண்ணை நாடிச் செல்லுவதில் உள்ள சிக்கல்களையும், மனைவிக்கு அதனால் ஏற்படும் மன உளைச்சலையும், நியாயமான கோபத்தையும் அழகுற, ஆழமாக காட்சிப்படுத்தியவரின் இப்படியொரு ஸ்டேட்மெண்ட் அதிர்ச்சியைத் தருகிறது. ஒரு கணவன் தன்னைவிட்டு வேறொரு பெண்ணை நாடும்போது அந்த மனைவி எவ்வளவு வருத்தமுறுகிறாள் என்பதை மிக நன்றாக ஒரு பெண்ணின் மனநிலையிலிருந்து புரிந்து கொண்டு அதை மிகச்சரியாகவும் படம் பிடித்த ஒரு ஆண்மகன் தன் மனைவியை அதே போன்றதொரு சோகத்தில் ஆழ்த்துவது எப்படி சாத்தியம்? படைப்புகள் என்பவை ஒரு படைப்பாளனின்...