நான் ரஜினியின் தீவிர ரசிகை. ரஜினியின் முள்ளும் மலரும், ஜானி, படிக்காதவன், குரு சிஷ்யன், தளபதி முதல் சந்திரமுகி வரை (சிவாஜி பார்க்கவில்லை) பார்த்தாயிற்று. ஜானியைப் போன்றதொரு இனிமையான, டீசன்ட்டான ரொமாண்டிக் படம் இன்னும் வரவில்லை. ஆனால் எந்திரன் பார்க்கப் போவதில்லை என்று தீர்மானமாக முடிவெடுத்து விட்டேன். காரணம் 'சன் பிக்சர்ஸ்'. அவர்களின் தொடர்ச்சியான விளம்பரம் வெறுப்பை ஏற்படுத்துகின்றதென்றால் அக்குடும்பத்தின் அனைத்து துறைகளிலுமான ஆக்டோபஸ் ஆக்கிரமிப்பு அக்குடும்பத்தின் மேல் ஒரு aversionஐயே ஏற்படுத்திவிட்டது. கலாநிதி மாறன், உதயநிதி, துரை தயாநிதி, அறிவுநிதி, அருள்நிதி, அந்த நிதி, இந்த நிதி - இவர்கள் கடும் உழைப்பால் மட்டும் இவர்களின் கம்பெனியைத் துவங்கவில்லை, நடிக்கத்துவங்கவில்லை. மாநிலத்திலும், மத்தியிலும் இவர்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி நினைத்தவுடன் ஒரு படத்தைத் தயாரித்து முடிக்கின்றனர். தங்களது சேனல்களை வைத்து ஓயாத ஒழியாத விளம்பரம். கருணாநிதி திரைப்படத்திற்கு வசனம் எழுதுவதற்கு அவருக்கு சம்பளம் 50 லட்சம் ரூபாயாம். இது அவரது தற்சமய எழுத்து திறமைக்காக கொடுக்கப்படும் பணமல்ல என்பது ஊரறிந்த ரகசியம். இன்னொரு விஷயம் - இவர் தனது பேரன்மார்கள் தயாரிக்கும் படத்திற்கு வசனம் எழுதுவதில்லை.(அப்புறம் படம் ஓட வேணாமா?? ;)
கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு USD 1.2 Billion ஆம். இந்திய மதிப்பில் இது எவ்வளவு ரூபாய் என்று யாராவது சொன்னால் நல்லா இருக்கும். உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கப்போகிறாராம். அவரின் மனைவி பத்திரிக்கை நடத்துகிறார். இப்படி இக்குடும்பத்தின் ஊடகத்துறை monopolyயால் 58 சிறிய பட்ஜட் படங்கள் வெளியிடப்பட முடியாமல் பெட்டியில் முடங்கிக் கிடக்கின்றனவாம். எத்தனை குடும்பங்களை இவர்கள் மறைமுகமாக நசுக்குகிறார்களோ??!!. இன்னொரு காமெடி - சமீபத்தில் சென்னையில் பார்லிமென்ட் கேள்வி-பதில் நேரத்தில் எப்படி பதிலளிப்பது, எப்படி பேசுவது என்று எம்பிக்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டதாம் - the funny part is - பார்லிமெண்ட்டில் எந்தக் கேள்விக்கும் பதிலளிப்பதில்லை. பேசுவதேயில்லை என்று அவைத்தலைவர் மீராக்குமார் மற்றும் பலரால் (உண்மையாக) குற்றம் சாட்டப்பட்ட மு.க.அழகிரியின் தலைமையில் இப்பயிற்சி வழங்கப்பட்டதாம். என்ன கொடுமை சரவணன் இது :(
இந்த திங்கட்கிழமை காலை என்னுடைய பேராசிரியரைப் பார்க்க செல்ல வேண்டியிருந்தது. அடையாறு டிப்போ செல்ல வேண்டும். கஸ்தூரிபாய் நகர் ஸ்டேஷனில் இறங்கினேன். ரோட்டைக் க்ராஸ் பண்ணி ஆட்டோ எடுக்க கஷ்டப்பட்டுக்கொண்டு (குறுக்கே ஓடி, மீடியனில் தாவி ஹெவி டிராஃபிக்கில் சர்க்கஸ் செய்ய நேரிடும்) ஸ்டேஷனிலிருந்தே ஆட்டோ எடுத்துக்கொண்டேன். ஆட்டோ டிரைவர் செய்தித்தாளை மடித்துவிட்டு வண்டி எடுத்தார். என்ன நியூஸ் படித்துக்கொண்டிருந்தாரோ தெரியல. செம கடுப்பாக இருந்தார். 1 ரூவா அரிசிய யாரு மேடம் சாப்பிடுறா? எங்க பாத்தாலும் இவனுங்க தான். நேத்து நான் எந்திரன் ட்ரெய்லர் பாக்கல மேடம். அதுக்கு பதிலா விஜய் டீவி முரளி ஷோ பாத்தேன் மேடம் - இன்னும் பல சொன்னார்.
ஒரு முடிவுக்கு வந்தேன். இவர்களைச் சாமான்யனான என்னால் எதுவும் செய்ய இயலாது. மிஞ்சி மிஞ்சிப் போனால் எந்திரன் பார்க்காமல் இருந்து கொள்ளலாம் அந்த ஆட்டோ ட்ரைவரைப் போல்.
4 comments:
ஹ்ம்ம்...! மறைபொருளாக கூட இல்லாமல் வெளியிலே வெடித்து கிளம்பிக் கொண்டிருக்கிறது
நீங்கள் சொன்ன அந்த கோபம்....
ஆனால் இந்த கோபம் வாக்கு சீட்டிலும் தெரிய வேண்டும்........
இவ்வளவு தூரம் அவர்கள் வெறி பிடித்து பணம் தின்பதற்கு எனக்கு தெரிந்து ஒரு காரணம் இருக்கிறது....
பெரியவர் எப்படியும் இன்னும் ஓரிரு வருடங்களே தாக்கு பிடிப்பார்....
அதன் பிறகு குடும்பம் சிதறி சின்னாபின்னம் ஆகி விடும்....
அப்படி ஆனாலும் கூட அவர்களெல்லாம் சிறு கஷ்டத்தையும் சந்திக்க கூடாதென்ற
ஒரு சின்ன ஆசை தான் ..! :) :)
அந்த கட்டிடம் மேல அவ்ளோ காதலா மாலா???? :)
ஆம் லெமூரியன். வெறி என்றே சொல்லலாம். கட்டடம் என்று சாதாரணமாக சொல்லிவிட்டீர்களே நியாயமா??
No politics plzzzzzzzzzz....
Post a Comment