பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடமிருந்தே வாழ்க்கைப்பாடங்களைக் கற்றுக்கொள்கின்றனர் – எதைச் செய்யவேண்டும் என்பதையும், எதைச்செய்யவே கூடாதென்பதையும்.
குடிக்கும் தந்தையைப் பார்த்து வளரும் பிள்ளை தானும் பெரியவனானவுடன் குடிக்கத்துவங்குகிறது. வன்முறையைக் கண்டு வளரும் குழந்தை வன்முறையைக் கையிலெடுக்கிறது. மாமியாரின் கொடுமைகளை அனுபவித்த ஒரு பெண், தானும் ஒரு கொடுமையான மாமியாராக உருவெடுக்கிறாள். Abusive adults are victims of abuse themselves. So, the abuses you do to your life partner / children will be taken up by your children.
Also, another thing to be considered : நீங்கள் உங்கள் கணவரை நடத்துவது போல் உங்கள் மருமகள் உங்கள் மகனை நடத்துவது உங்களுக்குச் சம்மதமா? அதே போல் நீங்கள் உங்கள் மனைவியை நடத்தும் விதத்தில் உங்கள் மருமகன் உங்கள் மகளை நடத்துவது உங்களுக்கு ஓ.கே தானா? உங்கள் ஆன்ஸர் ஒ.கே என்றால் நீங்கள் நல்ல முறையில் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறீர்கள். இல்லையெனில் நீங்கள் கட்டாயம் உங்களை மாற்றிக்கொள்ளவேண்டும்.
புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள் - நீதிமொழிகள் 14:1
சரி அப்படியெனில் ஒரு வீட்டைக் கட்டும் பொறுப்பு பெண்ணிற்கு மட்டும் தானா இருக்கிறது? இல்லை. நிச்சயம் ஆணுக்கும் சமபொறுப்பு இருக்கிறது. Let the man and woman of a family both be responsible and make the lives of their children easy and happy. Let us be responsible parents and responsible human beings.