மறைந்த பிரிட்டிஷ் இளவரசியின் இருபதாம் நினைவு நாள் ஆகஸ்ட்டில். இளவரசர்கள் வில்லியம், ஹாரி தங்கள் தாயார் பற்றிய பெர்சனலான நினைவுகளை முதன்முறையாக ஒரு தொலைக்காட்சி சானலில் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
இளவரசர் ஹாரி இதுவரை இருமுறை மட்டுமே தன் தாயாரின் மறைவுக்காக அழுதுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 20 வருட துக்கம் இன்னும் எக்கச்சக்கம் மீதமிருக்கிறது என்கிறார். Coincidental ஆக ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கமலஹாசன் தன் தாயார், தகப்பனாரின் மறைவின் போதோ அல்லது மிகச்சமீபமாக அவர் சகோதர்ரின் மறைவின் போதோ வாய் விட்டு அழுததெல்லாம் இல்லை. மாறாக சம்மந்தமேயில்லாமல் ஒரு சூரிய உதயத்தைப் பார்க்கும்போது அழுகை பீறிட்டுக்கிளம்பியது என்கிறார்.
யோசித்துப்பார்க்கும் பொழுது, இன்று வரை என் தகப்பனாரின் மறைவுக்கு நான் அழுததே இல்லை. அவர் மறைந்த போது என் வயது எட்டு. ஏன் அழவில்லை - சத்தியமாகத் தெரியவில்லை....