சிபிஎஸ்இ சமூக அறிவியல் ஒன்பதாம் வகுப்புப்பாடப்புத்தகத்திலிருந்து சில பகுதிகளை நீக்க வேண்டுமென்று கோரிக்கைகள் மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்டு தற்சமயம் அப்பகுதிகளை நீக்கி கல்வித்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி, அப்பகுதிகளை வகுப்பறையில் நடத்தக்கூடாதென்றும் மேலும் அப்பகுதியிலிருந்து பரிட்சையில் கேள்விகள் கேட்கக் கூடாதென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு விஷயத்தைக்குறித்து யாராவது போராடும்போதுதான் (அது எவ்வளவு சாதாரணமாக விஷயமாக இருந்தபோதிலும்) பலரின் கவனத்தை அது திருப்புகிறது. என்ன தான் இருக்கிறது அதில் என்ற ஆர்வக்கோளாறில் அதைப் படித்தோம்.
இது தான் பாடப்புத்தகத்தில் இருக்கிறது - 1800களில் சாணார் என்றழைக்கப்பட்ட நாடார் குலப்பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்கும் வகையில் ஆடை அணிவது திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தடை செய்யப்பட்டிருந்தது. உயர்குலத்தவரான நாயர் பெண்கள் மட்டுமே...