Thursday, September 13, 2012

நினைத்தாலே மனம் நிறையும், நாவூறும் உணவுகள்

                    நாம் வெவ்வேறு பொழுதுகளில் நம் வீடு தொடங்கி வெவ்வேறு இடங்களில் நிறைய வகை உணவுகளை உண்டிருப்போம். சாதாரண இட்டிலியில் தொடங்கி, எக்ஸாட்டிக் என்று சொல்வார்களே அப்படிப்பட்ட உணவு வகைகளைச் சுவைத்திருப்போம். ஆனால் ஏதோ ஒரு நாள் சாப்பிட்ட ஒரு உணவின் சுவை, நாவை விட்டும் மனதை விட்டும் நீங்காமல் என்றும் நின்று விடுகிறது. சில உணவுப்பொழுதுகளை, அந்த உணவு எவ்வளவு ருசியாயிருந்தாலும், மறந்துவிட விரும்புகிறோம்.
                   மாலைப்பொழுதுகளில் திருச்சி ரமணாஸின் மிகச்சுவையான கட்லட் மற்றும் காபி, வாசுவும் நானும் கேரளா, கோவளம் கடற்கரையில் சாப்பிட்ட சிக்கன் கோல்ட் காயின், யுகே - கோனிஸ்டனில் குடும்பத்தோடு ருசித்த flavorful penne pasta - தடுக்கி விழுந்தால் கிடைக்கக்கூடிய ருசியான இவை சென்னையில் அனேக இடங்களில் கிடைக்கின்றன. இருப்பினும் அன்று சாப்பிட்ட அந்த ருசி மறக்காமல் ஏன் மனதில் இனிக்கிறது? அமெரிக்கன் கல்லூரி எதிர் டீக்கடையில் ஒரு நாள் குடித்த டீயின் ருசி ஏன் அதற்குப்பின் எதிலும் இல்லை?
                          அமெரிக்கன் கல்லூரி மகளிர் விடுதி வெராண்டாவில் நானும், என் இனிய தோழி பிரேமாவும் அமர்ந்து சாப்பிட்ட Bread n அமுல் Butterன் சுவை இன்றும் மனதில் இனிக்க, என் பிள்ளைகளுக்கு வாங்கி வைத்திருந்த பிரெட் சிலைஸ்களில் ஒன்றை எடுத்துக்கடித்தேன். ஷாக் - இந்த பிரட்டையா அன்று நாங்கள் அவ்வளவு ரசித்து சாப்பிட்டோம்?
                உண்மையில் உணவின் ருசியை அந்த உணவு மட்டுமே தீர்மானிப்பதில்லை.  அந்த பிரட், பட்டரின் சுவையைத் தீர்மானித்தது அந்த பிரட்டும் பட்டருமா? - நிச்சயமில்லை. தோழியோடு பேசிக் களித்த பொழுதுகள், அந்த வேப்பமரக்காற்று, வரவில்லாமல் செலவுகள் செய்த, பொறுப்புகள் இல்லாத அந்தப் பருவம், அங்கே நிறைந்திருந்த வஞ்சமில்லா அன்பு - இவை தான் அந்த சாண்ட்விச்சின் ருசியைத்தீர்மானித்திருக்கின்றன. இப்பொழுதும் நான் மறக்க விரும்பும் ஸ்டார் ஹோட்டல் buffets, கல்யாண வீட்டு விருந்துகள் இருக்கின்றன. உணவில் மட்டும் சுவையிருந்தால், நட்சத்திர ஹோட்டல் விருந்துகள் இன்றும் மனதில் இனிக்க வேண்டுமே?
ருசியில்லாத சாப்பாட்டைச் சாப்பிடுவது கொடுமையில்லை. அனைத்திலும் மிகப்பெரிய கொடுமையாக ஔவை சொல்லுவது அன்பில்லாத பெண்ணின் கையால் உணவருந்துவதைத்தான். சமைக்கத்தெரியாத ஆனால் அன்பானவர்களின் சமையலைச்சாப்பிட்டுவிடலாம் - உண்ணீர் உண்ணீர் என்று ஊட்டதார் தம் மனையில் உணவருந்தாதீர்கள். அது எவ்வளவு தான் ருசியாக இருந்தாலும் கூட.

கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது;
அதனினும் கொடிது இளமையில் வறுமை;
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்


அதனினும் கொடிது அன்புஇலாப் பெண்டிர்;
அதனினும் கொடிது இன்புற
அவர்கையில் உண்பதுதானே

9 comments:

வரலாற்று சுவடுகள் said...

இன்முகத்தோடு பரிமாறப்படும் கூழும் அமிர்தமாகும் என்று சும்மாவா கூறியிருக்கிறார்கள் பெரியவர்கள்!:)

Anonymous said...

so nice....college la oru naal COBOL class la unga hostel experience neenga solirkenga mam.....
-Suji

Guna Sundari said...

//சில உணவுப்பொழுதுகளை, அந்த உணவு எவ்வளவு ருசியாயிருந்தாலும், மறந்துவிட விரும்புகிறோம்//
This line leads to guess the main point of this article.

Its true Mam.


kulandaivelu mohandas said...

முற்றிலும் உண்மை. நம் நண்பர்களோடு STAR ஹோடேல்களில் சாப்பிடும்போது மோசமான ருசி அற்ற உணவை ருசி உள்ளதாக நினைத்து அதிகநேரம் மற்றும் அதிக தொகை செலவழித்து சாப்பிடுகிறோம். அது நம் நண்பர்களோடு சேர்ந்து சாப்பிடுவதால் மட்டுமே அவ்வாறு நினைக்க தோன்றுகிறது. தனியாக சென்று STAR ஹோடேல்களில் சாப்பிடும்போது தான் அதன் உண்மையான ருசி தெரியும்.

Anonymous said...

have ypo forgotten the onion egg omlette of indra akka in american college hostel?

மாலா வாசுதேவன் said...

@ Kulandaivelu : Thank u sir fr ur comments

மாலா வாசுதேவன் said...

@ Varalatru chuvadugal: welcome n Thank u fr ur comments friend

மாலா வாசுதேவன் said...

hi anonymous indra akka and her food are an indispensable parts in our life forever. Thank u fr ur comments

மாலா வாசுதேவன் said...

Thank u Guna fr ur comments

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes