Tuesday, March 6, 2012

கணவரின் அன்பைத் தக்க வைத்துக்கொள்ள லாஜிக்கல் வழிகள்

எல்லாத் திருமணங்களும் சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகின்றன. எக்கச்சக்க கனவுகளோடும், எதிர்பார்ப்புகளோடும், பரஸ்பர அன்படும் காதலோடும் துவங்குகிறது மணவாழ்க்கை. திருமண நிச்சயத்துக்கும், திருமணத்துக்கும் உள்ள இடைவெளி நாட்கள் எவ்வளவு கனவுகளாலும், நேசத்தாலும் நிரப்பப்பட்டிருந்தன. இப்படி பொயட்டிக்காக துவங்கப்படும் மணவாழ்க்கை எங்கே சிக்கலாகத் துவங்குகிறது? எந்த இடத்தில் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளக்கூட பிடிக்காத நிலை ஏற்படுகிறது? இனிஷியல் டேஸ் காதலை வாழ்நாள் முழுக்கத் தக்கவைத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது? - ஒரு சிறிய கைட்லைன் உங்களுக்காக -






  1. மிக முக்கியமான முதல் பாய்ண்ட் - கணவரின் உறவினர்களை எக்காரணத்தைக் கொண்டும் குறை சொல்லாதீர்கள். மாமியார்கள் இன்செக்யூர்டாக உணர்வதால் நிறைய நியாயமில்லாத, தேவையில்லாத வேலைகள் பார்ப்பார்கள். ஆனால் அதை நீங்கள் உங்கள் கணவரிடம் criticise செய்து சொல்வீர்களானால் அதனால் கிடைக்கக்கூடிய பலன் virtually nothing. கணவர் சொல்லக்கூடிய பதில் - அவர்கள் செய்வது தவறு தான் என்று எனக்குத்தெரியும். ஆனால் வயதானவர்கள். அவர்கள் செய்வதை நீ ஏன் பொறுத்துக்கொள்ளக்கூடாது? ; என் கூடப்பிறந்த அக்கா. அவர்களுக்கு இல்லாத உரிமையா - இவை தான். எனவே அவர்கள் செய்வதைப் பொறுத்துக்கொள்ளுங்கள். கணவருக்கு உங்கள் மீதான காதல் கட்டாயம் 30%மாவது கூடும்.





  2. கணவருடைய வேலையின் தன்மையை நன்கு புரிந்து கொள்ளுங்கள். புரியாமல் லேட்டாக வருவதற்கோ, வெளியே அழைத்துச்செல்லாமல் இருப்பதற்கோ சண்டையிடாதீர்கள். ஏற்கனவே அவர்களின் வொர்க் ப்ரஷரோடு இதுவும் சேர்ந்து கொள்ளும்போது you make his life more tough.





  3. அடுத்து உணவு - கணவரின் இதயத்திற்குச் செல்லும் வழி வயிறு - போன்ற பழமொழிகளெல்லாம் இன்று அவுட் டேட்டட். இருவரும் வேலைக்குச் செல்வதானால் உணவுக்குத் தரப்படும் முக்கியத்துவத்தை ஆண்கள் குறைத்துக்கொண்டுள்ளனர். அதே போல் மற்ற விஷயங்களில் கோட்டை விட்டுவிட்டு (கணவர் குடும்ப உறுப்பினர்களை insult பண்ணுவது etc) நன்றாக சமைப்பதனால் மட்டும் அவற்றை ஈடுகட்டி விட முடியாது.




  4. பணத்தை தேவையில்லாமல் செலவு செய்யாதீர்கள்.


பிரச்சினை வரக்கூடிய ப்ரதான ஏரியாக்கள் இவைகளே. இத்தவறுகளைக் கவனமாகத் தவிர்க்கும் போது, ஆரம்ப நாள் காதல் என்றும் மாறாமல் இனிமையாய் தொடரும். இல்லறம் நல்லறமாய் இனிக்க எமது வாழ்த்துக்கள்.

4 comments:

Abi said...

mam these tips are very much needed for me right now. unga anubavan nalla pesuthu

Abi said...

sorry anubavam

Anonymous said...

very useful right now to safe life...

மாலா வாசுதேவன் said...

thank u anonymous for visiting the site, reading n commenting. do come again :)

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes