Wednesday, August 17, 2011

ஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஆண்களின் மனைவியர் படும்பாடுகள்  1. காலை 11 மணிக்கு எழுந்து, 1 மணிக்கு ஆஃபிஸ் போய், நள்ளிரவு (ஆக்சுவலி மறுநாள் காலை) 2 மணிக்கு வீட்டுக்கு வரும் இவர்களின் வாழ்க்கைமுறை - நமக்கு தலை சுற்றிவிடும். ஒரு 8 மணிக்காவது வீட்டுக்கு வரப்பாருங்கள் என்றால் வருவது சண்டை மட்டுமே. சமைத்து வைத்து காத்திருந்து, காத்திருந்து தூங்கவும் முடியாமல், விழித்திருக்கவும் முடியாமல்- கொடுமைங்க அது.


  2. பிள்ளைகள் வாரத்திற்கு 1 முறைதான் அப்பாவைப் பார்க்க முடியும். ஏனெனில் அவர்கள் தூங்கியபின் வீட்டிற்கு வந்து, அவர்கள் ஸ்கூலுக்கு சென்றபின் எழுந்திருத்தல்.


  3. திடீரென்று on-site செல்ல வேண்டியிருக்கும். முதலில் long-term என்று சொல்வர். சரியென்று நாம் பிள்ளைகளுக்கு இங்கு TC வாங்கி, வீட்டில் சாமான்களையெல்லாம் தூசி அடையாமல் இருக்க பேக் செய்து, கடைசி நேரத்தில் பிள்ளைகளுக்கு பாஸ்போர்ட் வாங்க நாயாய், பேயாய் அலைந்து -இதிலென்ன கஷ்டம் என்று தயவு செய்து நினைத்து விடாதீர்கள் நண்பர்களே. என் பிள்ளைகளுக்கு passport வாங்கப்போகும்போது தான் என் passportலிருந்த தவறுகளைக் கவனித்தோம் (என் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் கணவர் பெயர், கணவர் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் என் பெயர்- first name last name குழப்பங்கள்). பின்னர் எனக்கு passport க்கு மறுபடியும் விண்ணப்பித்து, அதற்குப்பின் பிள்ளைகளுக்கு வாங்கினோம். பிள்ளைகள் passportக்கு அம்மா passport கட்டாயம் வேண்டும். meanwhile வாசு அவசரமாக செல்ல வேண்டியிருந்ததால் நீ பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு வா. நான் முதலில் UK போகிறேன் என்று கிளம்பி விட்டார். அவர் கிளம்பிவிட்டதால் அப்பாவின் passportக்கு பதிலாக consulateலிருந்து letter வாங்கி அனுப்ப வேண்டுமென்றனர் passport officeல். போலி passportல் தப்பிச் செல்லும் தீவிரவாதிகள் ஏனோ என் ஞாபகத்திற்கு வந்தனர். இதையெல்லாம் முடித்து ஒரு வழியாக ஊருக்கு கிளம்பிவிட்டோம். UK சென்று வீட்டை furnish செய்து, car வாங்கி முடித்தவுடன் officeலிருந்து intimation. நீங்கள் அடுத்த வாரம் இந்தியா திரும்பி விட வேண்டுமென்று. மீண்டும் வாங்கியவற்றை அடிமாட்டுவிலைக்கு விற்று, திரும்ப இந்தியாவில் ஸ்கூலில் 1 வருட ஃபீஸை முழுமையாக கட்டி - ஸ் அப்பா


  4. அதே on-site short term என்பர். ஏற்கனவே பட்ட அனுபவத்தில் short-term தானே நீங்களே போய் வாருங்கள். நாங்கள் வரவில்லை என்போம். 3 மாதம் என்பது 6 மாதமாகி 8 மாதமாகி 1 வருடம் ஆகிவிடும். on-site extend ஆகிக்கொண்டே செல்லும். சிறு பிள்ளை இருந்தால் அது நம் தூரத்து சகோதரனையெல்லாம் அப்பா என்று அழைக்க ஆரம்பித்து விடும். சொந்தக்காரர்கள் வாரத்துக்கு 1 முறை கட்டாயம் போன் செய்து மாப்பிள்ளை வந்து விட்டாரா என்று கேட்டுவிடுவர். பெரிய பெண் வீட்டுக்கு புதுசா வந்திருக்கிறாரே ஒரு அங்கிள் (புது டிரைவர்) அவரோட Express Avenue போவோம் என்பாள். மானம் போகும்.


  5. வரவுக்கேற்ற செலவு எந்தக் கரன்சியில் சம்பளம் வாங்கினாலும் இருக்கும். இதை பெற்றவர்களும், உடன்பிறந்தவர்களும் கூட நம்பமாட்டார்கள்.

ஐ.டி துறையில் வேலை பார்க்கிறார். நன்கு படித்திருக்கிறார். நல்ல சம்பளம். மகளை அடிக்கடி வெளிநாட்டுக்குக் கூட்டிச் செல்வார் என்று ஆசைக்கனவுகளோடு மகளை ஐ.டி மணமகனுக்குத் திருமணம் செய்து கொடுக்க நினைக்கும் பெற்றோரே, யோசித்துச் செய்யுங்கள்.

6 comments:

ChitraKrishna said...

Amazing!

மாலா said...

வாங்க சித்ரா. உங்களுக்கும் அனுபவமா??? ;)

Anonymous said...

appo ITla irukkra pasangalakku yaaru ponnu tharuva

மாலா வாசுதேவன் said...

hi anonymous sathiyama innum 5 varushathula it karanukku yaarum ponnu thara mattanga :)

Inimai said...

madam.. also tell how the IT working girls are suffering too in work - life balance..

Saahshi said...

Well said mam

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes