Wednesday, September 1, 2010

சங்கடத்தில் ஆழ்த்திய சில கேள்விகள்

என் வாழ்வின் வெவ்வேறு சூழலில், பல்வேறு நிலைகளில் என்னை நோக்கி பல்வேறு கேள்விகள் வந்தன. அவை என்னை சில நேரங்களில் மனச்சோர்விற்கும், பயத்திற்கும் ஆட்படுத்தின. இவற்றைக் கேட்டவர்களும், தெரிவித்தவர்களும் யாரோ அல்ல. நான் என் பிரியத்திற்கு உரியவர்களாக நினைத்த நண்பர்களும், உறவினர்களுமே. கஷ்டப்படும் நேரத்தில் உறுதுணையாய் இருப்பார்கள் என நான் நினைத்தவர்கள் கேட்ட கேள்விகள் பின் வருமாறு:
திருமணத்திற்கு முன் :
 1. கம்ப்யூட்டர் படித்துவிட்டு காலேஜ்ல போயி கம்மியான சம்பளத்துக்கு வேலைக்கு சேந்திருக்கிற? (ஆசிரியப்பணி புனிதப்பணி என்று நான் நினைக்கிறேன்)
 2. உன் கலருக்குப் பெரிய வேலைல இருக்குற மாப்பிள்ளை எப்படி கிடைப்பான்?
 3. படிச்ச பையன்தான தேடுறீங்க - இந்தப்பையன் தான் டிப்ளமோ படிச்சிருக்கானே?? (நான் MCA)
திருமணத்திற்குப் பின்: (திருமணம் நன்கு படித்த, பெரிய வேலையில் இருக்கும் பையனோடு, கடவுளின் கிருபையால் இனிதே நடந்து முடிந்தது)
 1. உன் வீட்டுக்காரருக்கு சம்பளம் எவ்வளவு?
 2. Bombayல வேலை பாத்த, UK போனேன்னு சொல்ற. ஏன் இப்டி dress பண்ணிக்கிற? ஏன் hairstyle இப்படி இருக்கு? (மக்களே, நான் சேலை அல்லது சுடிதார் தான் அணிந்து கொள்கிறேன். சடை பின்னிக் கொள்கிறேன். வேற என்னங்க செஞ்சுக்குறது?)
 3. என்னமோ PhD பண்ணப் போறேன்னு சொன்ன? இன்னும் guide ஒன்னும் கெடைக்கலயா?
 4. ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த போது - இதென்ன பழைய துணி மாதிரி இருக்கு உன் டிரெஸ்?
 5. ஒரு தோழியை நெடுநாட்கள் கழித்து சந்தித்தபோது - உன் மகன் இன்னும் எலும்பும் தோலுமாத்தான் இருக்கானா?
 6. அதே தோழி - உன் மகள் எதுக்கெடுத்தாலும் பிடிவாதம் பிடிப்பாளாமே?
 7. ஒரு கல்யாண வீட்டில் - உன் வீட்டுக்காரரைத் தலைக்கு dye அடிக்கச் சொல்லு. ரொம்ப நரைச்சிருக்கு.
 8. உன் தம்பிக்குப் பொண்ணே அமைய மாட்டேங்குதாமே?

இந்தக் கேள்விகளும், ஐடியாக்களும் அக்கறையினால் கூட வந்திருந்திருக்கலாம். ஆனாலும் இவை எனக்கு பல சமயங்களில் எரிச்சலைத்தான் ஏற்படுத்தின. மற்றவர்களின் personal spaceக்குள் நாம் நுழைவதற்கு நமக்கு எந்த அதிகாரமும் இல்லை. கேட்டால் மட்டுமே நமது கருத்துக்களையும், விமர்சனங்களையும் நாம் தெரிவிப்போமாக. "Let there be spaces in your togetherness - Kahlil Gibran"

5 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இது பரவா இல்லை. நண்பர்கள் வீட்டுக்கு போகும்போது நீங்க என்ன ஜாதின்னு கேக்குறவங்களை அப்படியே ஓங்கி குத்தலாம்னு தோணும்..

லெமூரியன்... said...

\\இந்தக் கேள்விகளும், ஐடியாக்களும் அக்கறையினால் கூட வந்திருந்திருக்கலாம்...//
எனக்கும் அப்டிதான் தோணுதுங்க..!

Anonymous said...

Really some people dont think before asking questions.

மாலா said...

yes priya. கமல் ஸ்டைல்ல சொல்லணும்னா - கேள்வி கேக்குறது ரொம்ப ஈஸி. பதில் சொல்லிப் பாருங்க அப்ப தெரியும் :)

பிரேமா said...

\இந்தக் கேள்விகளும், ஐடியாக்களும் அக்கறையினால் கூட வந்திருந்திருக்கலாம்...//

லேமுரியன் சொல்வதை நானும் வழி மொழிகிறேன் ...........

நம்ம மனச பாதிக்கும் அப்படின்னு தெரியாம கேட்கிறது தான் மாலா...

அன்பு தோழி பிரேமா...

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes